Monday, May 21, 2012

thumbnail

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளம் தொடக்கம்


இணைய உலகில் பேஸ்புக், ஆர்குட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றில் பேஸ்புக் முன்னணியில் உள்ள வலைத்தளமாக விளங்கிவருகிறது.
தேடுபொறி உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் கூகுளும் தமக்கென்று கூகுள் பிளஸ் என்ற சமூக வலைத்தளத்தை தொடங்கி நடத்தி வருகிறது. இதை ஜிமெயில் பயனாளர்கள் அதிகம் பேர் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் கம்யூட்டர் சாப்ட்வேர் உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் புதியதாய் ஒரு சமூக வலைத்தளத்தை துவங்கியிருக்கிறது.
கடந்த 2011-ல் சோதனை முறையில் இருந்த இந்த பீட்டா வடிவ சமூக வலைத்தளம், பொதுப்பயன்பாட்டிற்கு தற்போது விடப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் மைக்ரோசாப்டின் Fuse Labs இதை வடிவமைத்துள்ளது.
www.so.cl என்ற பெயரில் இந்த சமூக வலைத்தளம் இயங்குகிறது. சோஷியல் என்ற ஆங்கில வார்த்தையை இரண்டாகப் பிரித்து (so.cl - சோ.சிஎல்) என இதன் வலைப்பக்க முகவரியை அமைத்திருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About