Showing posts with label joshna Chinappa. Show all posts

Sunday, August 19, 2012

thumbnail

சீன அழகி யூ வென்ஸியா, மிஸ் வேர்ல்ட் 2012 /Miss world 2012


சீன அழகி யூ வென்ஸியா, மிஸ் வேர்ல்ட் 2012 போட்டியில் பட்டம் வென்றார். இந்திய அழகி வான்யா மிஸ்ரா டாப் 7 அழகிகள் பட்டியலுக்குள் மட்டுமே வர முடிந்தது. ஆனால் பட்டம் வெல்ல முடியாமல் போய் விட்டது. சீனாவின் ஆர்டோஸ் நகரில் மிஸ் வேர்ல்ட் 2012 அழகிப் போட்டி நடந்தது. இதில் இந்தியா சார்பில் மிஸ் இந்தியா வேர்ல்ட் வான்யா கலந்து கொண்டார். இந்த அழகிப் போட்டியில் சீனாவின் யூ வென்ஸியா மிஸ் வேர்ல்ட் பட்டத்தைத் தட்டிச் சென்றார். வான்யா, இறுதிச் சுற்று வரை தகுதி பெற்றார். இருப்பினும் பட்ட வாய்ப்பு நழுவிப் போய் விட்டது. இருப்பினும் வான்யாவுக்கு மிஸ் சோசியல் மீடியா, பியூட்டி வித் எ பர்பஸ் ஆகிய இரு பட்டங்கள் கிடைத்தன. வான்யா, ஜலந்தரைச் சேர்ந்தவர். அங்கு எலக்ட்ரிகல் என்ஜீனியரிங் படித்து வரும் மாணவி ஆவார். மொத்தம் 116 அழகிகள் இந்த ஆண்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். இதுவரை நடந்த போட்டிகளிலேயே அதிக அளவில் அழகிகள் கலந்து கொண்டது இது என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, May 26, 2012

thumbnail

சென்னை ஓபன் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டிக்கு ஜோஷ்னா தகுதி

சென்னை, மே.26-

சென்னை ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை அனகா அலங்காமணி போராடி தோல்வியை தழுவினார். அவரை இங்கிலாந்தின் சாரா ஜேன் பெர்ரி 8-11, 11-5, 6-11, 14-12, 11-6 என்ற செட் கணக்கில் வென்றார்.

இந்த ஆட்டம் 1 மணி 9 நிமிடங்கள் நீடித்தது. மற்றொரு அரைஇறுதியில் போட்டித் தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இந்திய நட்சத்திர வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 13-11, 11-4, 11-8 என்ற நேர் செட்டில் எகிப்தின் சல்மா ஹனியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஜோஷ்னா, போட்டித்தரநிலையில் 3-வது இடத்தில் உள்ள சாரா ஜேன் பெர்ரியை சந்திக்கிறார்.

About