Showing posts with label president candidate. Show all posts

Monday, July 23, 2012

thumbnail

இந்த ஜென்மத்துலயே நீ குடியரசுத் தலைவரா வந்துடுவே


என்னங்க இது... பிரணாப் தாதாவோட சகோதரி இப்படியெல்லாம் சொல்லியிருக்காங்க... நல்லாவா இருக்கு இது?
அப்படி என்ன சொல்லிட்டாங்க? பிரணாப் கனவைப் பத்தி சொன்னாங்களே... அதுதான?!
ஆமாமா... அதை நல்லா கவனிச்சீங்களா? குடியரசுத் தலைவர் மாளிகையில் குதிரை லாயத்தைப் பாத்தாங்களாம்... அப்போ பிரணாப் தாதா சொன்னாராம்... லாயத்துல இருக்கற குதிரைகளைப் பாருங்க... அதுங்களுக்கு எந்த வேலையும் இல்லே... ஆனா அதுங்களை எவ்ளோ சிறப்பா பராமரிக்கிறாங்க... எனக்கும் ஒரு ஆசை இருக்கு. அடுத்த ஜன்மத்துல இந்த மாளிகைல இருக்கற குதிரைங்கள்ல ஒண்ணா நான் பிறக்கணும்” அப்படின்னு! அதுக்கு அவங்க சகோதரி சொன்னாங்களாம்... “நீ ஏம்பா அடுத்த ஜென்மத்துல இந்த குடியரசுத் தலைவர் மாளிகை குதிரைங்கள்ல ஒண்ணா பிறக்கணும்.. இந்த ஜென்மத்துலயே நீ குடியரசுத் தலைவரா வந்துடுவே” அப்படின்னு வாழ்த்தினாராம். இதைப் படிச்சிட்டு ஒரு நண்பர் எனக்கு போன் பண்ணி, "நீ ஒரு ரப்பர் ஸ்டாம்ப்பா ஆயிடுவேன்னு எவ்ளோ சிம்பாலிக்கா சொல்லியிருக்காங்க அந்த தீர்க்கதரிசி?! எந்த வேலையும் செய்யாத குதிரை பராமரிக்கப் படுறதைவிட குடியரசுத் தலைவர் மட்டுமில்லே அவர் குடும்பமே எதுவும் செய்யாமலேயே நாட்டு மக்களால பராமரிக்கப் படுவாங்க அப்படின்னு முன்னாடி இருந்தவரு கதையை சொல்லாம சொன்னாங்களோ? ஒரு நாட்டு குடியரசுத் தலைவருக்கு இதைவிட அவமானம் இருக்குமா தெரியலியே!” அப்படின்னு ரொம்ப வருத்தப்படுறாரு? இதெல்லாம் தேவையா சொல்லுங்க?
....?

Sunday, June 17, 2012

thumbnail

ஜனாதிபதி தேர்தல்: அப்துல் கலாம் நிறுத்தப்பட்டால் பிரணாப் முகர்ஜி வெற்றியை பாதிக்கும்


ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய கட்சி பலத்தின் அடிப்படையில் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றிவாய்ப்பு இருந்தாலும், அப்துல் கலாம் நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட ஓட்டபோட வாய்ப்புள்ளது.
ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ரகசிய முறையில் ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. எனவே எந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஓட்டுபோடுகிறார்கள் என்பது தெரியாது. இதைவைத்து அப்துல் கலாமுக்கு ஆதரவாக கட்சிமாறி ஓட்டபோட நிறைய வாய்ப்புகள் உள்ளன.
அப்துல் கலாமுக்கு அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியிலும் மரியாதை உள்ளது. அவர் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர் என்பதால் அவரை பலரும் ஆதரிக்க தயாராக உள்ளனர். எனவே கட்சி கட்டுப்பாட்டையும் மீறி அவருக்கு ஆதரவாக ஓட்டு போட்டால் பிரணாப் முகர்ஜிக்கு பாதிப்பு ஏற்படலாம்.
பாராளுமன்றம்- சட்டமன்றத்தில் நடக்கும் மற்ற விஷயங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடும் போது கட்சி கொறடாவின் உத்தரவை ஏற்று ஓட்டுபோட வேண்டும். அதை மீறினால் கட்சி தாவல் தடைசட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் இந்த முறை பொருந்தாது. எனவே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஓட்டுபோடலாம்.
1969-ம் ஆண்டு ஜாகீர் உசேன் மரணத்தை அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அப்போது காங்கிரஸ் அதிகார பூர்வ வேட்பாளராக சஞ்சீவி ரெட்டி அறிவிக்கப்பட்டார். ஆனால் பிரதமர் இந்திராகாந்தி வி.வி.கிரியை தனியாக நிறுத்தி வெற்றி பெற வைத்தார். இதனால் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது.
காங்கிரசுக்கு இருந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கைபடி சஞ்சீவிரெட்டிதான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் பலரும் கட்சிமாறி வி.வி.கிரிக்கு ஓட்டுபோட்டதால் அவர் வெற்றிபெற்று விட்டார். அதிகார பூர்வ காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சீவிரெட்டி தோல்வி அடைந்தார்.
அப்துல்கலாம் நிறுத்தப்பட்டால் மட்டுமே மாற்று கட்சியினர் அவருக்கு ஆதராவக ஓட்டுபோட வாய்ப்புள்ளது. வேறு யாரையாவது நிறுத்தினால் மாற்று கட்சி ஓட்டுகள் விழுவதற்கு வாய்ப்பு இல்லை.

About