என்னங்க இது... பிரணாப் தாதாவோட சகோதரி இப்படியெல்லாம் சொல்லியிருக்காங்க... நல்லாவா இருக்கு இது?
அப்படி என்ன சொல்லிட்டாங்க? பிரணாப் கனவைப் பத்தி சொன்னாங்களே... அதுதான?!ஆமாமா... அதை நல்லா கவனிச்சீங்களா? குடியரசுத் தலைவர் மாளிகையில் குதிரை லாயத்தைப் பாத்தாங்களாம்... அப்போ பிரணாப் தாதா சொன்னாராம்... லாயத்துல இருக்கற குதிரைகளைப் பாருங்க... அதுங்களுக்கு எந்த வேலையும் இல்லே... ஆனா அதுங்களை எவ்ளோ சிறப்பா பராமரிக்கிறாங்க... எனக்கும் ஒரு ஆசை இருக்கு. அடுத்த ஜன்மத்துல இந்த மாளிகைல இருக்கற குதிரைங்கள்ல ஒண்ணா நான் பிறக்கணும்” அப்படின்னு! அதுக்கு அவங்க சகோதரி சொன்னாங்களாம்... “நீ ஏம்பா அடுத்த ஜென்மத்துல இந்த குடியரசுத் தலைவர் மாளிகை குதிரைங்கள்ல ஒண்ணா பிறக்கணும்.. இந்த ஜென்மத்துலயே நீ குடியரசுத் தலைவரா வந்துடுவே” அப்படின்னு வாழ்த்தினாராம். இதைப் படிச்சிட்டு ஒரு நண்பர் எனக்கு போன் பண்ணி, "நீ ஒரு ரப்பர் ஸ்டாம்ப்பா ஆயிடுவேன்னு எவ்ளோ சிம்பாலிக்கா சொல்லியிருக்காங்க அந்த தீர்க்கதரிசி?! எந்த வேலையும் செய்யாத குதிரை பராமரிக்கப் படுறதைவிட குடியரசுத் தலைவர் மட்டுமில்லே அவர் குடும்பமே எதுவும் செய்யாமலேயே நாட்டு மக்களால பராமரிக்கப் படுவாங்க அப்படின்னு முன்னாடி இருந்தவரு கதையை சொல்லாம சொன்னாங்களோ? ஒரு நாட்டு குடியரசுத் தலைவருக்கு இதைவிட அவமானம் இருக்குமா தெரியலியே!” அப்படின்னு ரொம்ப வருத்தப்படுறாரு? இதெல்லாம் தேவையா சொல்லுங்க?....?
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments