Friday, July 27, 2012

thumbnail

என்.டி.திவாரிதான் ரோகித் சேகரின் தந்தை: மரபணு சோதனையில் உறுதி/N D Tiwari is biological father of Rohit Shekhar

காங்கிரஸ் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் ஆளுநருமான என்.டி.திவாரிதான் தனது தந்தை எனக் கூறி ரோகித் சேகர் (32) என்ற இளைஞர் கடந்த வழக்கு தொடர்ந்தார். திவாரி இதை மறுத்து வந்தார். அத்துடன் டெல்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் என 7 முறை முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தார். 

வழக்கின் தீவிரத்தை உணர்ந்த டெல்லி ஐகோர்ட், திவாரிக்கு மரபணு சோதனை நடத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீடும் ரத்து செய்யப்பட்டது. 

இதையடுத்து மே மாதம் திவாரியிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதேபோல் அவருடைய மகன் எனக் கூறி வரும் ரோகித் சேகர் மற்றும் அவரது தாயாரிடமும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. 

இந்த பரிசோதனை அறிக்கை சீலிட்ட உறையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிக்கை ஜூலை 27 திறக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் மரபணு சோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் திறந்து படிக்கக் கூடாது என்று திவாரி டெல்லி ஐகோர்ட்டில நேற்று மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதி ரேவா கேத்ரபால் தள்ளுபடி செய்ததுடன், சோதனை அறிக்கையை கோர்ட்டில் திறந்து படிக்க முடிவு செய்தார். 

அதன்படி மாலையில் மரபணு சோதனை அறிக்கை படிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், ரோஹித் ஷேகர் என்.டி. திவாரியின் மகன்தான் என்பது தெளிவாகியுள்ளது. ரோகித் சேகர் மற்றும் அவரது தாயார் உஜ்வாலா சர்மா ஆகியோரின் மரபணுவும், என்.டி. திவாரியின் மரபணுவும் ஒத்துப் போவதாகவும், எனவே, ரோகித் சேகரின் தந்தை திவாரிதான் என்பது உறுதியாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தீர்ப்பு வெளியானதையடுத்து டென்ஷனுடன் வெளியே வந்த என்.டி.திவாரியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அவர், ‘இது எனது சொந்த விஷயம். இந்த விஷயத்தில் நாடு தனது நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என்று கூறி பேட்டி அளிப்பதை தவிர்த்தார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About