Sunday, July 22, 2012

thumbnail

புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி, வருகிற 25-ம் தேதி பதவியேற்க உள்ளார்./Pranab Mukherjee elected as 13th President

நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ.சங்மாவைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. மற்றும் இதர அரசியல் கட்சிகள் ஆதரவில் பி.ஏ.சங்மா போட்டியிட்டார்.

இதில் பிரணாப் முகர்ஜி மொத்த மதிப்பில் 7,13,763 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், எதிரணி வேட்பாளரான பி.ஏ.சங்மாவுக்கு சுமார் 3,15,987 மதிப்பு வாக்குகள் மட்டுமே கிடைத்ததாகவும், இதைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி பெற்றுள்ளதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர் அக்னிஹோத்ரி அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார்.

புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி, வருகிற 25-ம் தேதி பதவியேற்க உள்ளார். அன்றைய தினம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About