Saturday, July 07, 2012

thumbnail

Wimbledon 2012: Mens' single final awaits Andy Murray v Roger Federer-Serena Williams wins fifth singles title,விம்பிள்டன் டென்னிஸ்-இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் பெடரர்,மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 5வது முறையாக சாம்பியன் பட்டம்

 விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனை அக்னியஸ்கா ரட்வன்ஸ்காவுடன் நேற்று மோதிய செரீனா 6,1 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்ட ரட்வன்ஸ்கா, அதை பொருட்படுத்தாமல் 2வது செட்டில் கடுமையாகப் போராடினார். இரு வீராங்கனைகளும் தங்கள் சர்வீசில் புள்ளிகளைக் குவித்ததால் ஆட்டம் இழுபறியாக நீடித்தது.


இதில் அபாரமாக விளையாடிய ரட்வன்ஸ்கா யாரும் எதிர்பாராத வகையில் 7,5 என்ற கணக்கில் 2வது செட்டை கைப்பற்றி 1,1 என சமநிலை ஏற்படுத்தினார். எனினும், 3வது செட்டில் அதிரடியாக விளையாடிய செரீனா, ரட்வன்ஸ்காவின் சர்வீஸ்களை முறியடித்து 6,1, 5,7, 6,2 என்ற செட் கணக்கில் வென்று 5வது முறையாக விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.


இதில் ஆண்கள் ஒற்றையர் நேற்று நடந்த கால் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்று அரை இறுதியில் நுழைந்தார். அவர் மிக்கைல் யூஸ்னியை 6-1, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் தோற்கடித்தார்.  

மற்றொரு கால் இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் முன்னணி ஆட்டக்காரரான ஜோகோவிக்கும் புளோரியன் மேயரும் மோதினார்கள். அதில் ஜோகோவிக் 6-4, 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.  

இந்நிலையில் இன்று நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் பெடரர்- ஜோகோவிக் ஜோடி மோதியது. இதில் ரோஜர் பெடரர் 6-3, 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிக்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 

பெடரர் இதுவரை 32 கிராண்ட்சிலாம் அரை இறுதியில் விளையாடி இருக்கிறார். 6 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தற்போது 7-வது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வெல்ல முனைப்புடன் விளையாடி வருகிறார்.

இதுவரை கிராண்ட்சிலாம் போட்டிகளில் கடந்த 2 ஆண்டுகளில் இந்த ஜோடி 6 அரை இறுதியில் மோதி இருக்கிறது. இதில் 4 போட்டிகளில் ஜோகோவிக் வெற்றி பெற்றுள்ளார். விம்பிள்டனில் இருவரும் அரை இறுதியில் மோதியது இதுவே முதல் முறையாகும்.

மற்றொரு அரை இறுதியில் இங்கிலாந்தின் ஆண்டி மர்ரே 6,3, 6,4, 3,6, 7,5 என்ற செட் கணக்கில் சோங்காவை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றார். விம்பிள்டனில் 74 ஆண்டுகளுக்குப் பிறகு (1938: ஆஸ்டின்) இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமை மர்ரேவுக்கு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகு (1936ல் பிரெட் பெர்ரி) சாம்பியன் பட்டம் பெறும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் மர்ரே படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், 6 விம்பிள்டன் உட்பட 16 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள மகத்தான வீரரான ரோஜர் பெடரருடன் பைனலில் இன்று மர்ரே மோதுகிறார்.

புது உத்வேகத்துடன் விளையாடி வரும் மர்ரே, இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி தனது முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறார். 2009, 2010, 2011 விம்பிள்டனில் அவர் அரை இறுதியில் போராடி தோற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் (2010, 2011), யுஎஸ் ஓபன் (2008) இறுதிப் போட்டியிலும் அவர் கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் சாதனையை (7 விம்பிள்டன் பட்டங்கள்) சமன் செய்வதுடன் மீண்டும் நம்பர் 1 அந்தஸ்தைப் பெறும் முனைப்புடன் பெடரர் களமிறங்குவதால் பைனலில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About