Wednesday, July 11, 2012

thumbnail

Lawyers strike against Higher Education Bill /நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

மத்திய அரசு கொண்டுவரவுள்ள உயர்கல்வி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளையும் இந்தப் போராட்டம் நடைபெறும் என வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் உயர்கல்வி மசோதா தாக்கல் செய்யப்பட்டால் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்து ஆதிக்கம் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பது வழக்கறிஞர்கள் தரப்பில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு. மேலும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியைப் போல் சட்டக்கல்வியையும் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஏற்கெனவே சிறப்பாக  இயங்கிக் கொண்டிருக்கும் சட்டக்கல்விக்கு இந்த மசோதா சிக்கலை ஏற்படுத்தும் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர்களின் நாடு தழுவிய இந்தப் போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் வெகுவாகப் பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About