சென்னை: டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் கலந்து கொண்டவர்களில் சிலர், எளிதாக இருந்தது என்றும், பலர் கடினமாக இருந்தது என்றும் கருத்து தெரிவித்தனர்.
தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் உட்பட பல்வேறு பணிகளுக்காக, மாநிலத்தில், 4,000 மையங்களில், காலையில் குரூப்-4 தேர்வும், பிற்பகலில் குரூப்-8 தேர்வும் நடந்தன. இரு தேர்வுகளையும் சேர்த்து, 12 லட்சம் பேர் எழுதினர். தேர்வாணைய தலைவர் நடராஜ் எடுத்த நடவடிக்கை காரணமாக, அனைத்து மையங்களிலும் பலத்த ஏற்பாடு மற்றும் தீவிர கண்காணிப்புடன் தேர்வுகள் நடந்தன. ஒவ்வொரு மையத்திலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வெளியாட்கள் நுழையாதவாறு நடவடிக்கை எடுக்கப் பட்டது.விடைகள்; முடிவுகள்: குரூப் 4 தேர்வுக்கான விடைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நடந்த தேர்வின் விடைத் தாள்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் கருவூலத்தில் அளிக்கப்பட்ட பிறகு விடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும். சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமைக்குள் விடைகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியிட அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. மனிதத் தவறுகளின் காரணமாக ஆங்காங்கே சில குறைபாடுகள் ஏற்பட்டாலும் மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதிலோ அல்லது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை பெறுவதிலோ எந்த குழப்பமும் ஏற்படவில்லை குறிப்பிடத்தக்கது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments