Sunday, July 29, 2012

thumbnail

அண்ணா ஹசாரேவின் போராட்டத்துக்கு இன்று பொதுமக்களின் ஆதரவு அதிகரித்திருந்தது./Anti-corruption campaigner Anna Hazare threatens fast-unto-death from tomorrow on Lokpal issue‎


புது தில்லி, ஜூலை 29: புது தில்லியில் ஜந்தர் மந்தரில் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ள அண்ணா ஹசாரேவின் போராட்டத்துக்கு இன்று பொதுமக்களின் ஆதரவு அதிகரித்திருந்தது.
இன்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக அறிவித்து ஹசாரே நேரடியாகக் களத்தில் இறங்கிவிட்டார். உண்ணாவிரத மேடையில் அவர் இதுகுறித்துப் பேசவும் செய்தார்.
இதனிடையே கடந்த இரு நாள்களில் உண்ணாவிரதப் பந்தலில் பொதுமக்களின் பங்களிப்பு குறைந்திருந்தது. இதனால் அவரது போராட்டத்துக்கு ஆதரவு குறைந்து வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதாலும், விடுமுறை தினமானதாலும் பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்து அண்ணாவுக்கு ஆதரவாகக் கோஷம் எழுப்பினர்.
மேலும், அடுத்த ஒரு வாரத்துக்கு அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு, உண்ணாவிரதத்துக்கு வாருங்கள் என்று அண்ணா ஹசாரே ஆதரவாளர்களுக்கு கோரப்பட்டதாம்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About