Sunday, July 29, 2012

thumbnail

அதி நவீன பிரமோஸ் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.India today test fired BrahMos supersonic cruise missile as part of a user trial by the Army from a test range at Chandipur off Odisha coast


அதி நவீன பிரமோஸ் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.இந்த தகவலை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை, ஓடிசா மாநிலத்தில் உள்ள சண்டிப்பூர் ராணுவ சோதனை மையத்தில் நடைபெற்றது. சுமார் 290 கிலோ மீட்டர் வரையிலான இலக்கினை குறி வைத்து தாக்கக் கூடிய, பிரமோஸ் ஏவுகணைகள் இந்தியரஷ்ய கூட்டுத் தயாரிப்பு ஆகும். சுமார் 300 கிலோ எடைகொண்ட வெடிபொருளை இந்த ஏவுகணை எடுத்துச் செல்லக் கூடியது.
இந்த சோதனை, வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, பிரமோஸ் ஏவுகணை விரைவில் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About