Tuesday, July 24, 2012

thumbnail

அசாமில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல்-50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து வசித்த பகுதியில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.Ethnic clash in Assam: 18 dead

கவுகாத்தி: அசாமில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடர்ந்து பரவி வருகிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து வசித்த பகுதியில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அரசு அமைத்துள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோக்ராஜ்கர் மாவட்டத்தில் போடா பழங்குடியினருக்கும், சிறுபான்மையினத்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது வரை கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று 3 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கலவரத்தை அடக்க முடியாமல் மாநில அரசு தவித்து வருகிறது. இந்த கலவரம் காரணமாக பலர் வீடுகளை இழந்துள்ளனர். இவர்கள் 75 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோக்ராஜ்கர் பகுதியில் வெடித்த கலவரம் இன்று அருகில் இருக்கும் துப்ரி, ஷிரங், உதல்கிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவியிருக்கிறது.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இந்த ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பலரும் ரயில்வே ஸ்டேஷன்களில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்வருக்கு பிரதமர் வேண்டுகோள்: இதற்கிடையில் மாநில காங்., முதல்வர் தருன்கோகைக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். ‌போன் மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மாநிலத்தின் தற்போதைய நிலவரத்தை முழுவதும் கேட்டறிந்தார். தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். கலவரத்தை அடக்க முழு அளவில் கவனத்துடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About