Friday, July 20, 2012

thumbnail

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 14 பேர் உயிரிழப்பு/Gunman open fires at Batman movie; 14 die



அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 14 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் டென்வர் நகர திரையரங்கம் ஒன்றில் மர்ம நபர் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். இதில் 14 பேர் இறந்தனர்.  மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவம் நடந்த திரையரங்கம், கொலராடோ மாகாணத்துக்கு உள்பட்ட அரோரா என்ற புறநகரப் பகுதியில் உள்ளது. 3  திரையரங்குகளைக் கொண்ட அந்த வளாகத்தில், பேட்மன் வரிசையில் டார்க் நைட் ரைசஸ் என்ற புதிய திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது.
தாக்குதல் நடத்திய மர்ம நபரிடம் 3 துப்பாக்கிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் அவர் வீசியுள்ளார்.
இதனால், தாக்குதல் நடந்த அரங்கு முழுவதும் தொடர்ந்து புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.  படத்தில் துப்பாக்கிச் சண்டை நடக்கும் நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்நச்சு வாயுத் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முகமூடி அணிந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.  முழுக் கறுப்பு நிறத்தில் குண்டு துளைக்காத உடைஹெல்மெட்  ஆகியவற்றையும் அவர் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத்  தாக்குதலில் ஈடுபட்டது ஒரேயொரு நபர்தான் என்பதை அமெரிக்க போலீஸார் உறுதி செய்துள்ளனர்.  சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும், திரையரங்க வளாகத்தைச் சுற்றி வளைத்த அவர்கள், சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About