Sunday, July 08, 2012

thumbnail

TNEB 4000 Field asst.Vacancies filled through employment-TN CM /மின் வாரியத்தில் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உத்தரவு-தமிழக அரசு

மின் வாரியத்தில் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உத்தரவு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்போது காலியாக உள்ள 4 ஆயிரம் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த நியமனம் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நேரடியாக நடைபெறும் என்று தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. கள உதவியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி காலத்தில் 3 ஆயிரத்து 250 ரூபாய் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பயிற்சிக்குப் பின்னர், அவர்கள்  பணி நிரந்தரம் செய்யப்பட்டு, காலமுறை ஊதியத்தில் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் மேலும் அதிகரித்து, மின் பயனீட்டாளர்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த சேவை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About