Thursday, July 19, 2012

thumbnail

Thoppu ND Venkatachalam sworn-in as TN minister/தமிழக வருவாய்த் துறை புதிய அமைச்சராக தோப்பு வெங்கடாசலம்


சென்னை, ஜூலை 19:தமிழக வருவாய்த் துறை புதிய அமைச்சராக தோப்பு வெங்கடாசலம் இன்று கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுக் கொண்டார்.
.
கவர்னர் ரோசய்யா அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய அமைச்சர் பதவியேற்றார்.

தமிழக வருவாய்த்துறை அமைச்சராக இருந்த கே..செங்கோட்டையன் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு புதிய அமைச்சராக தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டார். புதிய அமைச்சர் பதவியேற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்றது. ராஜ்பவன் தர்பார் மண்டபத்தில் இன்று பதவியேற்பு விழா எளிய முறையில் நடைபெற்றது. முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய அமைச்சராக தோப்பு வெங்கடாசலம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் டி.ஜெயக்குமார், துணை சபாநாயகர் தனபால், நிதியமைச்சர் .பன்னீர்செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, செய்தித் துறை செயலாளர் ராஜாராம், இயக்குனர் சங்கர் உள்ளிட்ட அரசுத் துறை உயரதிகாரிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக பதவியேற்பு விழா தொடங்கும் போது தேசிய கீதத்தின் சுருக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

பதவியேற்பு விழா முடிந்ததும் புதிய அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதல்வரிடமும், கவர்னரிடமும் வாழ்த்து பெற்றார். பின்னர் அமைச்சர்கள் அனைவரும் கவர்னர் மற்றும் முதல்வருடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About