Tuesday, July 17, 2012

thumbnail

US navy opens fire off Dubai, Indian fisherman killed/அமெரிக்க கடற்படை துப்பாக்கிச் சூடு : துபாயில் தமிழக மீனவர் பலி

தில்லி, ஜூலை 17 : துபாயில் இயங்கும் மீன்பிடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த தமிழக மீனவர்கள் உள்ளிட்டோர் நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியாக வந்த அமெரிக்க ரோந்து கடற்படையினர், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், தமிழகத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் உயிரிழந்தார். 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.பலியான மீனவர் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தைச் சேர்ந்த சேகர் என்பதும், படுகாயமடைந்தவர்கள் அதே ஊரைச் சேர்ந்த முத்துமுனிராஜ், முருகன் மற்றும் பண்டுவநாதன் ஆகியோர் என்பது தெரிய வந்ததை அடுத்து, அவர்களது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த சேகரின் உடலை தாயகம் கொண்டு வரவும், காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், உரிய நீதி பெற்றுத் தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.துபாயில் அமெரிக்கப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் பலியான சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துபாயில் உள்ள இந்திய தூதரகத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About