சென்னை, ஜூலை 15: சர்வதேச அளவில் குளியலறை சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள "வாமா' நிறுவனம் சென்னையில் தடம் பதித்துள்ளது. ''வாமா'' என்றால் அழகு என்று அர்த்தமாம். சீனாவில் ஜோங் யாஹ் என்பவரால் 2006-ம் ஆண்டு 17 ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனத் தயாரிப்புகள் இப்போது கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் பிரபலமாக உள்ளது. சீன தயாரிப்புகள் என்றாலும் இந்நிறுவனத் தயாரிப்புகளுக்கான மூலப் பொருள்கள் ஆஸ்திரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. சென்சார் டச் கண்ணாடி, எல்சிடி டிவி கண்ணாடி, எல்இடி விளக்கு கொண்ட கண்ணாடி உள்ளிட்ட தயாரிப்புகள் சர்வதேச அளவில் பிரபலமானவை. சென்னையில் இந்நிறுவனத் தயாரிப்புகள் என்விஷன் லைஃப்ஸ்டைல் லிமிடெட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனம் வாமா இந்தியா என்ற பெயரில் மேலும் சில விற்பனையகங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments