Friday, July 13, 2012

thumbnail

ANNA UNIVERSITY COUNSELING BEGINS ON 13TH JULY 2012 | GENERAL COUNSELING SESSION OF ANNA UNIVERSITY/என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கியது: முதல் இடம் பிடித்தவர்களுக்கு அமைச்சர் சேர்க்கை கடிதம் வழங்கினார்

தமிழ்நாட்டில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மொத்தம் 504 உள்ளன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 454 இடங்கள் உள்ளன. இவற்றில் அரசு இடங்கள் மட்டும் 1 லட்சத்து 71 ஆயிரத்து 417 ஆகும்.




இந்த இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கவுன்சிலிங் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். பொது பிரிவு கவுன்சிலிங் இன்று காலை தொடங்கியது. இதில் பங்கேற்க 1 லட்சத்து 69 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.



இன்று 200 முதல் 199 வரை கட்-ஆப் மார்க் பெற்ற 639 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. அவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு முதல் 10 இடங்கள் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு சேர்க்கைக்கான கடிதத்தை வழங்கினார்.



அந்த மாணவ - மாணவிகளும் அவர்கள் தேர்ந்து எடுத்த பாடப்பிரிவுகளும் வருமாறு:-



1. தேவபிரசாத் (மெக்கானிக்கல்), 2. சிவக்குமார் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), 3. அசோக்குமார் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), 4. ஐஸ்வர்யா (எலக்ட்ரானிக் கம்யூனிகேசன்), 5. சரவணன் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), 6. சுந்தர்ராமன் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), 7. கிருஷ்ணப்பன் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), 8. விக்னேஷ் (மெக்கானிக்கல்). இவர்கள் 8 பேரும் கிண்டி பொறியியல் கல்லூரியை தேர்வு செய்தனர்.



9. அஸ்வின்குமார் (மெக்கானிக்கல்), 10. கவுதமன் (எலக்ட்ரானிக் கம்யூனிகேசன்)



இவர்கள் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியை தேர்வு செய்தனர்.



நிகழ்ச்சியில் உயர்கல்வி துறை செயலாளர் ஸ்ரீதர், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ரமேஷ்சந்த் மீனா, பதிவாளர் சண்முகவேலு, கிண்டி பொறியியல் கல் லூரி முதல்வர் சேகர், பேராசிரியர்கள் காளிதாஸ், ராமலிங்கம், நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



நாளை 199 முதல் 197 வரை கட்-ஆப் மார்க் எடுத்த 2646 மாணவ - மாணவிகளுக்கும் நாளை மறுநாள் 197 முதல் 195 வரை கட்-ஆப் மார்க் எடுத்த 3387 பேருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.



தினமும் 3 ஆயிரம் பேர் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட உள்ளனர். மொத்தம் 8 பிரிவாக கவுன்சிலிங் நடக்கிறது. மாணவர்களின் வசதிக்காக 6 இடங்களில் பெரிய திரை அமைக்கப்பட்டு உள்ளது. 1000 பேர் அமரும் வகையில் பிரமாண்ட கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கல்வி கடன் வழங்கும் வங்கிகளின் மையமும் இடம் பெற்றுள்ளது.



அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந்தேதி வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About