Wednesday, July 04, 2012

thumbnail

Tamil Nadu topped the States in the number of liquor consumers-இளைஞர்களில் 30 சதவீதம் பேர், போதைப் பழக்கத்தில் சிக்கி சீரழிந்து வருகின்றனர்'

இளைஞர்களில் 30 சதவீதம் பேர், போதைப் பழக்கத்தில் சிக்கி சீரழிந்து வருகின்றனர்'' என, போலீஸ் துணை கமிஷனர் ஹேமா கருணாகரன் தெரிவித்தார்.போலீஸ் துறை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், தியாக ஒளிச்சுடர் மகளிர் மன்றம், தளிர் சமூக சேவை மையம் இணைந்து, உலக போதைப் பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தியது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். போதைப் பொருள் நுண்ணறிவு குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி., ராமு, தலைமை வகித்து பேசியதாவது:போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, மாணவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். கஞ்சா, அபின், பிரவுன்சுகர், கோகைன் போன்ற போதைப் பொருட்களுக்கு, இளைஞர்கள் சமுதாயம் அடிமையாகி வருவது வேதனையளிக்கிறது; இளைஞர்கள் வாழ்வே, கேள்விக்குறியாகி விடுகிறது.போதையால் இளைஞர்கள், பாதை மாறி, சமுதாய குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இன்பத்திற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் போதைப் பொருட்களை நுகரத் துவங்கி, அவற்றுக்கு அடிமையாகி, அதிலிருந்து மீளமுடியாமல் துடிக்கும் இளைஞர்களை மீட்டு, கரை சேர்க்க வேண்டும்.இவ்வாறு, டி.எஸ்.பி., பேசினார்.
விழிப்புணர்வு தேவை
மாநகர போலீஸ் சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் ஹேமாகருணாகரன், பேரணியை துவக்கி வைத்து பேசியதாவது:போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து, விழிப்புணர்வு இல்லாததால், இளைஞர்கள் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். போதைக்கு பெண்கள் அடிமையாவது கிடையாது; ஆண்கள் அதிகளவில் போதைப் பழக்கத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.குடும்பத்தில் இருக்கும் ஆண்கள், குடும்பப் பொறுப்பை மறந்து, போதைப் பழக்கத்தில் மூழ்கி விடுகின்றனர். அவர்களை, பெண்களால் மட்டும் மீட்க முடியாது. அவர்களாக விழிப்புணர்வு பெற்றால்தான் தீர்வு கிடைக்கும். ஆண்கள், கல்லூரிகளில் போதைப் பொருள் நுகர்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது என்கிறார்கள்; ஆனால், இளைஞர்கள் போதையின் பிடியில் உள்ளனர் என்பது, வருத்தமாக உள்ளது. இளைஞர்களில், 15 - 16 வயதுள்ளவர்களில், 30 சதவீதம் பேர், போதைப் பழக்கத்தில் சிக்கி சீரழிந்து வருகின்றனர். அதனால் அவர்களின் குடும்பமும் சீரழிகிறது என்பதை, உணராமல் உள்ளனர்.சமீப காலமாக பள்ளி மாணவர்கள், குடிப்பழக்கத்தில் மூழ்கி வருகின்றனர். ஸ்டேசனரி பொருளான "ஒயிட்னரை' நுகர்ந்து போதை ஏற்றிக்கொள்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது, வேதனையாக உள்ளது.உறுதியேற்க வேண்டும்
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், கலந்து கொள்வதுடன் இல்லாமல், போதைக்கு அடிமையான 10 பேரை மீட்பேன் என, உறுதி எடுக்க வேண்டும்.போதை பாதிப்பு பற்றி, இளைஞர்கள் குறும்படம் எடுக்க முன்வந்தால், அவர்களுக்கு உதவ போலீஸ் தயாராக உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால், உயிரிழப்பு விபத்து அதிகரித்து வந்தது. போலீஸ் நடவடிக்கையால், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது குறைந்துள்ளது.இவ்வாறு, போலீஸ் துணை கமிஷனர் பேசினார்.மகளிர் அமைப்பு நிர்வாகிகள், பள்ளி நிர்வாகிகள் பேசினர். காந்திபுரம் வி.கே.கே. மேனன் ரோட்டில் துவங்கிய பேரணி, ராமகிருஷ்ணா ரோடு, மகளிர் பாலிடெக்னிக், ஆர்.டி.ஓ., அலுவலக ரோடு, ஏ.டி.டி., காலனி, வழியாக வ.உ<.சி., மைதானத்தை அடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்களுக்கு ஆயிரத்து ஒரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
பெண்கள் பங்கு முக்கியம்!

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About