Showing posts with label tamilan. Show all posts

Wednesday, May 30, 2012

thumbnail

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக சாம்பியன்

உலக செஸ் சாம்பியன்ஷிப்  இறுதிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன், இஸ்ரேலின் போரீஸ் ஜெல்பாண்டு இடையே கடும் போட்டி நிலவியது.

மொத்தம் 12 சுற்றுகளை கொண்ட இறுதிப் போட்டியில் இரு வீரர்களும் தலா 6 புள்ளிகள் பெற்று வெற்றியாளரை முடிவு செய்ய முடியாமல், போட்டி டை பிரேக்கருக்கு சென்றது. முதல் சுற்று டை பிரேக்கரில் முடிய, 2வது போட்டியில் காய்களை விரைவாக நகர்த்திய ஆனந்த்தின் தாக்குதலில் ஜெல்பாண்டு திணறினார்.

அடுத்தடுத்து சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விஸ்வநாதன் ஆனந்த், 1 வெற்றி, 3 டிரா மூலம் 2.5 புள்ளிகளை பெற்றார். ஆனால் ஜெல்பாண்டு சில தவறான காய் நகர்த்தல் மூலம் புள்ளிகளை பெற முடியவில்லை. இதன் மூலம் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதன் மூலம் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Saturday, May 26, 2012

thumbnail

ஜப்பான் உயிரியல் பூங்காவிலிருந்து இருந்து தப்பித்த பென்குயின்: 2 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டது

டோக்கியோ, மே. 26 -

ஜப்பானில் நீர்வாழ் பிராணிகளுக்கான உயிரியல் பூங்கா ஒன்று டோக்கியோவில் செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவிலிருந்து தப்பித்துச் சென்ற பென்குயின் இரண்டு மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு பிடிபட்டுள்ளது.

ஹம்போல்ட் ரகத்தைச் சேர்ந்த இந்த ஒரு வயது பென்குயின், தன்னைவிட இரண்டு மடங்கு உயரமான ஒரு சுவற்றைத் தாண்டி இந்த பூங்காவிலிருந்து தப்பிச் சென்றது. அருகிலுள்ள ஆற்றில் குதித்த பென்குயின் ஆற்றிலேயே சுதந்திரமாக இருந்துள்ளது.

இந்த ஆற்றில் பென்குயின் இருப்பதை கண்டவர்கள் பூங்கா நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து பென்குயினைப் பிடிக்க பூங்கா நிர்வாகம் தனது ஊழியர்களை அனுப்பியது. ஜப்பான் கடலோரக் காவல் படையினரும் அப்பணியில் ஈடுபட்டனர்.

ஒரு சமயம் காவல் படையினர் அப்பென்குயினை பிடித்துவிடும் தூரத்தில் வந்தும், அது அவர்கள் கைகளில் சிக்காமல் தப்பியோடிவிட்டது. இருமாதங்களுக்குப் பிறகு, அதே ஆற்றில் சுற்றித் திரிந்த பென்குயின் பூங்காவின் ஊழியர்களின் கைகளில் சிக்கிக் கொண்டது.

பென்குயின் உடல்நலத்தை பரிசோதித்த பூங்கா ஊழியர் ஒருவர் பென்குயின் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இருமாதங்களுக்கும் மேலாக பூங்கா ஊழியர்களுக்கு தண்ணி காட்டி வந்த பென்குயின் பிடிபட்டதை அடுத்து ஏராளமானோர் அப்பென்குயினை பார்வையிட்டு வருகிறார்களாம்.

Saturday, May 19, 2012

thumbnail

புது‌க்கோ‌ட்டை தொகு‌தி இடை‌த்தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் தே.மு.‌தி.க. வே‌ட்பாள‌ர் ஜா‌கீ‌ர் உசை‌ன் ‌மீது காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌ர்.

புது‌க்கோ‌ட்டை தொகு‌தி இடை‌த்தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் தே.மு.‌தி.க. வே‌ட்பாள‌ர் ஜா‌கீ‌ர் உசை‌ன் ‌மீது காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌ர்.

புது‌க்கோ‌ட்டை‌ தொகு‌தி இடை‌த்தே‌‌ர்த‌லி‌ல் போ‌ட்டிவத‌ற்கான வே‌ட்பு மனு‌த் தா‌க்க‌ல் நே‌ற்று தொட‌ங்‌கியது. அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் கா‌ர்‌த்‌தி‌க் தொ‌ண்டைமா‌னு‌ம், தே.மு.‌தி.க சா‌ர்‌பி‌ல் ஜா‌கீ‌ர் உசைனு‌ம் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர்.

ஆனா‌ல் ‌தி.மு.க., பா.ம.க., ம.‌தி.மு.க., இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட், ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள், பா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட்ட க‌ட்‌‌சிக‌ள் இடை‌த்தே‌ர்தலை புற‌க்க‌ணி‌த்து ‌வி‌ட்டன. இதன‌ா‌ல் அ.‌தி.மு.க. - தே.மு.‌தி.க. இடையே நேரடி போ‌ட்டி ‌‌நிலவு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் தே.மு.‌தி.க. வே‌‌ட்பாள‌ர் ஜா‌கீ‌ர் உசை‌ன் நே‌ற்று வே‌ட்பு மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். அ‌ப்போது ஏராளமான க‌ட்‌சி ‌நி‌ர்வா‌கிகளுட‌ன் செ‌ன்று அவ‌ர் வே‌ட்பு மனு தா‌க்க‌ல் ச‌ெ‌ய்ததாக தே‌ர்த‌ல் அ‌திகா‌ரி காவ‌ல்துறை‌யின‌ர் புகா‌ர் செ‌ய்து‌ள்ளா‌ர்.

இ‌ந்த புகா‌ரி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் தே.மு.த‌ி.க. வே‌ட்பாள‌ர் ஜா‌கீ‌ர் உசை‌ன் ‌மீது கணே‌ஷ்நக‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌ர்.

இது கு‌றி‌த்து ஜா‌கீ‌ர் உசை‌ன் கூறுகை‌யி‌ல், அ.‌தி.மு.க. அர‌சி‌ன் ப‌ழிவா‌ங்கு‌ம் நடவடி‌க்கை இது எ‌ன்றா‌ர். ச‌ட்ட‌ப்படி இ‌ந்த வழ‌க்கை ச‌ந்‌தி‌ப்பே‌ன் எ‌ன்று‌‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
thumbnail

தனியாருக்கு நிலம் கையகப்படுத்தும் வேலையில் அரசு ஈடுபடக்கூடாது: பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை

புதுடெல்லி,மே.19-
 
தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தனியார் தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்று ஊரக வளர்ச்சித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதற்கு தொழில்துறையிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
 
நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, புதிதாக நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் மசோதா என்ற புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்து, அது நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்விற்கு அனுப்பப்பட்டது. தற்போது, அந்த நிலைக்குழு தனது பரிந்துரைகளை அளித்திருக்கிறது.
 
அதன்படி, ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறையைப் போல, அரசு இனிமேல் தனியாருக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. ரெயில்வே, நெடுஞ்சாலை விரிவாக்கம், உள்ளிட்ட பொதுப்பணிகளுக்காக மட்டுமே நிலம் கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
மேலும், தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தும்போது, கிராமப்புறமாக இருந்தால் அந்த நிலத்தின் சந்தை மதிப்பில் நான்கு மடங்கும், நகர்ப்புறமாக இருந்தால் இரண்டு மடங்கும் கொடுக்க வேண்டும். தேவையான நிலத்தின் உரிமையாளர்களில் 80 சதம் பேரிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். வாங்கிய நிலத்தை மேம்படுத்தி, அதில் 20 சதத்தை நில உரிமையாளருக்கே திருப்பி வழங்க வேண்டும். 10 ஆண்டுகளில் நிலத்தை விற்றாலோ வேறு ஒருவருக்கு மாற்றினாலோ, அதில் 20 சதம் லாபத்தை நில உரிமையாளருக்குத் தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகளை அளித்திருக்கிறது.
 
இதற்கு தொழில்துறையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதும் தடுக்கப்படும் என்று அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.
 
இந்தப் பரிந்துரைகள் தொழில்மயமாக்கலை, குறிப்பாக உற்பத்தித்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷும், வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இந்த விவகாரம் அமைச்சரவையின் விவாதத்துக்கு வரும்போது அதைக் கடுமையாக எதிர்க்கப்போவதாக ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
 
நிலம் கையகப்படுத்துவதில் அரசின் பங்கு இருக்கக் கூடாது என்ற அளவுக்கு இன்னும் நம்நாடு வளர்ச்சியடையவில்லை என்றும் தனியார் நிறுவனங்கள் தனிப்பட்டவர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகின்றன என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Saturday, May 12, 2012

thumbnail

உத்தரப் பிரதேசத்தில் முந்தைய மாயாவதி அரசு கொண்டுவந்த 27 திட்டங்களை அகிலேஷ் தலைமையிலான சமாஜவாதி அரசு வெள்ளிக்கிழமை ரத்து செய்தது

  லக்னெள, மே 11: உத்தரப் பிரதேசத்தில் முந்தைய மாயாவதி அரசு கொண்டுவந்த 27 திட்டங்களை அகிலேஷ் தலைமையிலான சமாஜவாதி அரசு வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.  அம்பேத்கர், மாயாவதியின் அரசியல் குருவான கான்சிராம் ஆகியோரின் பெயரிலான திட்டங்கள், அரசு ஒப்பந்தப் பணிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவு உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்ட திட்டங்களில் அடங்கும்.  ரூ. 5 லட்சம் வரையிலான அரசு ஒப்பந்தப் பணிகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு முறையே 21 சதவீதம், 2 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று 2009-ம் ஆண்டு ஜூன் 30-ல் மாயாவதி அரசு அறிவித்தது. அதன் பிறகு ரூ. 25 லட்சம் வரையிலானபணிகளுக்கு இந்த ஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டது.  அனைத்துப் பிரிவினருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டால்தான் கட்டுமானப் பணிகள் தரமாக இருக்கும் என்பதால் இந்தத் திட்டத்தை ரத்து செய்வது என அமைச்சரவை முடிவு செய்ததாக அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.  டாக்டர் அம்பேத்கர் கிராம விகாஸ் யோஜனா என்ற திட்டம் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக டாக்டர் ராம் மனோகர் லோகியா சமக்ரா கிராம விகாஸ் யோஜனா என்ற திட்டம் அமல்படுத்தப்படுகிறது.  இது தவிர மேலும் 26 திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த நிதியாண்டில் ரூ.4861.72 கோடி மிச்சமாகும். மான்யவார் கான்ஷிராம் நகர்ப்புற ஏழைகள் வீட்டு வசதித் திட்டம், கான்ஷிராம் பசுமை பூங்கா, பாபா சாஹிப் பீமாராவ் அம்பேத்கர் பிரதீக் ஸ்தல், டாக்டர் அம்பேத்கர் நல்கூப் யோஜனா உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்ட பிற முக்கியத் திட்டங்களாகும்.

Sunday, May 06, 2012

thumbnail

Tamilnadu wind Energy season is between May- Oct


A. Thangavelu, Chief Engineer of Tamil Nadu Generation and Distribution Corporation (TANGEDCO) here, told  that agricultural load had come down with rain in several parts of the district during the last one week and industrial load gone up. Hence, the total consumption remained almost the same.
“We need to get at least 1,000 MW constantly from wind energy to reduce the duration of load shedding,” he said. Yet, power cut in the district had come down by four to six hours a day. There was no load shedding in the night.
Indian Wind Power Association chairman K. Kasthoorirangaian said that wind energy generation would increase in a couple of days. With nearly 7,000 MW of installed wind energy capacity, the State was likely to generate about 3,500 MW of wind energy this year.
In a memorandum to the TANGEDCO, he stated that it should harvest wind energy to the maximum this season.

About