Showing posts with label education. Show all posts

Monday, May 21, 2012

thumbnail

கவனத்தைக் கவரும் கடல்சார் படிப்புகள்!

உலகின் மிகப்பெரிய சொத்து கடல். பல்வேறு வகையான உயிரினங்களின் வாழிடம் அது. நிலத்தில் கிடைக்காத பல அரிய வளங்கள் கடலில் இருக்கின்றன. பல்வேறு வகையான வர்த்தகத்துக்கும், போக்குவரத்துக்கும் கடல் பயன்படுகிறது. மீன்பிடித்தல், துறைமுகப் பணிகள், கப்பல் பணிகள், கடல் தொடர்பான சட்டங்கள், கடல் வணிக மேலாண்மை என கடலைச் சார்ந்த துறைகள் ஏராளம். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் கடல் சார்ந்த பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், மீன்பிடி தொழில், சுற்றுலா, தாதுவளம் பயன்பாடு, உப்பு தயாரிப்பு போன்றவை நடந்து வருகிறது. குறிப்பாக தமிழக கடற்கரை பகுதிகளில் கடற்பாசி, கடற்புல், கடல் தாவரங்கள் உள்ளிட்டவை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொக்கிஷமாக உள்ளன.
கடல்சார் துறைகளில் தாரளமான வேலைவாய்ப்பு இருக்கிறது. கடல் தொடர்பான வேலைகளுக்குப் படிக்கும் படிப்புகளை கடல் சார் படிப்புகள் என்று அடக்கினாலும், அதில் பலவகையான பிரிவுகள் இருக்கின்றன. அவ்வப்போது புதிது புதிதாகப் பல்வேறு துறைகள் வந்துகொண்டும் இருக்கின்றன. இதில் விசேஷம் என்னவென்றால், கடல்சார் படிப்புகளுக்கு அதிக வேலை வாய்ப்பு இருப்பதுடன், ஊதியமும் மற்ற துறைகளைக் காட்டிலும் மிக அதிகமாகவே இருக்கிறது. கடல்சார் படிப்புகளில் மிகவும் அதிக வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதும், பிரபலமானதும் மெரைன் என்ஜினியரிங் எனப்படும் கடல்சார் பொறியியல் படிப்பாகும். கடந்த பல வருடங்களாகவே, இந்தப் படிப்பில் மாணவர்களின் ஆர்வம் பெருமளவில் அதிகரித்து வந்திருக்கிறது.
அந்த படிப்பு தற்போது பல பொறியியல் கல்லூரிகளில் பாடப்பிரிவாக இருந்து கற்றுகொடுக்கப்பட்டாலும், அந்தப் படிப்பிற்கென்றே சில பிரத்யேக கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானதும் தலைமையானதும் சென்னையில் அமைந்துள்ள மத்திய கடல்சார் பல்கலைக்கழகம். இந்தியாவில் கடல்சார் படிப்புகளுக்கென்று பல்கலைக்கழகம் வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 2008-ம் ஆண்டில்தான் நிறைவேறியது. இதற்கென நாடாளுமன்றத்தில் பிரத்யேகச் சட்டம் இயற்றப்பட்டு கடல்சார் பல்கலைக்கலைக்கழம் சென்னை உத்தண்டியில் (ராஜீவ் காந்தி சாலை - கிழக்குக் கடற்கரைச் சாலை இடையே) அமைக்கப்பட்டது.
4 ஆண்டு பி.டெக். கடல்சார் பொறியியல் மற்றும் 3 ஆண்டு பி.எஸ்சி, கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட படிப்புகளை இந்தப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. 17 முதல் 25 வயதுக்கு உள்பட்ட 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் சராசரியாக 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.2.25 லட்சம் வரை கட்டணம் இருக்கும். பிஎஸ்சி படிப்பு கொச்சியில் நடக்கும். இந்தப் பல்கலைக்கழகத்துடன் 7 முக்கிய கடல்சார் அரசு கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அவை:
1. தேசிய கடல்சார் கல்வி நிறுவனம், சென்னை,
2. டி.எஸ்.சாணக்யா, மும்பை.
3. லால்பகதூர் சாஸ்திரி கடல்சார் உயர் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, மும்பை.
4. கடல்சார் பொறியியல் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம், மும்பை.
5. கடல்சார் பொறியியல் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம்.
6. கொல்கத்தா, இந்திய துறைமுக மேலாண்மைக் கல்வி நிறுவனம்.
7. தேசிய கப்பல் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், விசாகப்பட்டினம்.
இவை தவிர கொச்சியில் இந்திய கடல்சார் பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ளது


முகவரி: தேசிய கடல்சார் கல்வி நிறுவனம்,
கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டி,
சென்னை 600 119.
தொலைபேசி : (044) 24530343 / 345.
பேக்ஸ் : (044) 2453 0342.
மின்னஞ்சல் : imu.chennaicampus@yahoo.com
டி.எஸ்.சாணக்யா கல்வி நிறுவனம்
அரபிக் கடலோரம் நவி மும்பையில் டி.எஸ். சாணக்யா பயிற்சிக் கப்பல் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. உலகில் தலைசிறந்த கடல்சார் கல்வி நிறுவனங்களுள் இதுவும் ஒன்று.
இங்கு கற்றுத்தரப்படும் படிப்புகள்:
1. பி.எஸ்சி. - கப்பல் செலுத்தும் அறிவியல் - 3 ஆண்டுகள்
2. கப்பல் செலுத்தும் அறிவியல் டிப்ளமா - 1 ஆண்டு
3. நவீன தீ தடுப்பு படிப்பு - 1 வாரம்
4. சர்வதேச கடல்சார் நெருக்கடிகள் பாதுகாப்பு  அமைப்பு தொடர்பான படிப்பு - 2 வாரங்கள்
பி.எஸ்சி படிப்புக்கு ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும், 20 வயதுக்கு மேற்படாத திருமணமாகாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும். கல்விக் கட்டணம் 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.98 ஆயிரம்.
முகவரி: டி.எஸ். சாணக்யா கல்வி நிறுவனம், நியூ மும்பை, தொலைபேசி : (022) 2770 1935 / 2770 3876.பேக்ஸ்: (022) 2770 0398
லால்பகதூர் சாஸ்திரி கல்லூரி- கடல்சார் உயர் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்:

Friday, May 18, 2012

thumbnail

Rupee fall: Students abroad bear the brunt, fees shoot up

The sharp depreciation of the rupee has spooked the parents of students studying abroad. With the rupee closing at a low of 54.47 on Thursday, many of them are an anxious lot.

Most parents preferred to pay the term fees in installments and now are literally paying the price for it. They said they did not see it coming and were wondering how they would manage as they still had to contend with the living expenses even if they took care of the fees.

"Most students, who go overseas for higher education, are from middle or upper middle class families. Now, they find themselves forced into a hand-to-mouth existence. Increasing their allowance by even $50 is becoming more difficult," said Chandrika Sagar, mother of Praveen, who is pursuing an MS in Thayer School of Engineering in the US.

In Praveen's case, an educational loan covers his entire tuition fee unlike in India. Students abroad use downloaded study materials, borrow books and even get hand-medowns. So even though the tuition fee may not pinch, living expenses will.

Some parents who paid the fee at one go were relieved. K R Maalathi, mother of Pavithra, a student of the London School of Economics, said, "I couldn't afford the collateral security the banks asked for giving my daughter an educational loan. So I paid her fees myself. I made the decision to pay the entire tuition fee at one go. At that time, I found it quite difficult but now I think it's the best move I made. I avoided spending a lot more money unnecessarily."

Overseas education agents said that though universities give a waiver for upfront payment of fees, most parents (70%) prefer to pay it in two to three installments. "With the rupee depreciating by more than 20% since January, the difference between last term's fee and this term's has run into five digits. I did not take this into consideration when I planned the annual budget," said Siva Subramanian, whose son studies in Germany.

With the currency fall singeing pockets, students are now looking for free lunches. "My friends, who don't have a kitchen in their house, head to the ISKCON temple for a free meal, because a simple breakfast costs around 10 pounds. Sometimes the academic pressure doesn't allow us time to make even a simple sandwich at home," said Priyanka Bhavanishankar, who studies at LSE.

Agents say this increase in expenses is unlikely to result in students dropping out, but could drive many to take up part-time jobs. "Most countries allow students to work a certain number of hours during the weekdays and full time during the holidays. The local population doesn't want to work in the weekends, so many Indian students take advantage of this facility," said Naveen Chopra, chairman of The Chopras, an overseas education agency.
thumbnail

கால்நடை மருத்துவ படிப்பில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம்

கீழ்பாக்கம் :கால்நடை மருத்துவ படிப்பில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுவரை 4,000 விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. சென்னை வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், உணவு உற்பத்தி, கோழியின உற்பத்தி ஆகிய பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளில் 2012,13ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பம் கடந்த 14,ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் 2,500 விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளன.

நாமக்கல், ஒரத்தநாடு, தஞ்சாவூர், நெல்லை ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் வேலூர், தர்மபுரி, மாதவரம், கோவை, திருச்சி, ராஜபாளையம் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திலும் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இன்று வரை 4 ஆயிரம் விண்ணப்பம் விற்பனையாகி உள்ளது. இவற்றில், கால்நடை மருத்துவ பட்டப் படிப்புக்கு மட்டும் 3,400 விண்ணப்பம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கால்நடை மருத்துவ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சந்திரஹாசன் தெரிவித்தார்.

Thursday, May 17, 2012

thumbnail

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில் பி.எட். விண்ணப்பிக்க

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட், படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 4 ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பி.எட், படிப்பில் 1000 இடங்களுக்கு (500 தமிழ்வழி, 500 ஆங்கிலவழி) ஜூலை 27 ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.பல்கலைக்கழகத்தின் கீழ்க்கண்ட 11 ஒருங்கிணைப்பு மையங்களில் பி.எட், விண்ணப்பம் கிடைக்கும். அன்னை வேளாங்கண்ணி கலை கல்லூரி- சென்னை, எஸ்.என்.ஆர் கல்லூரி- கோவை, எஸ்.டி.ஹிந்து கல்லூரி- நாகர்கோவில், மதுரை சமூக அறிவியல் கல்வி நிறுவனம்- மதுரை, சேதுபதி அரசு கலைக் கல்லூரி-இராமநாதபுரம், சோனா தொழில் நுட்ப கல்லூரி- சேலம், நேதாஜி சுபாஷ் சந்திர போசு கல்லூரி-திருவாரூர், புனித ஜான் கல்லூரி- பாளையங்கோட்டை, தேசியக் கல்லூரி- திருச்சி, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி-வேலூர் மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி- விழுப்புரம்.மேலும் கீழ்கண்ட பி.எட்., கல்வி மையங்களிலும் பி.எட்., விண்ணப்பம் கிடைக்கும். ஸ்டெல்லா மேட்டிடுனா கல்வியியல் கல்லூரி-சென்னை, புனித கிறிஸ்டோப்பர் கல்வியியல் கல்லூரி- சென்னை, டாக்டர் என்.ஜி.பி கல்வியியல் கல்லூரி-கோவை, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி-திருநெல்வேலி, உமா மகேசுவரனார் கல்வியியல் கல்லூரி-தஞ்சாவூர், கிரசன்ட் கல்வியியல் கல்லூரி-திருவண்ணாமலை, கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரி-மசக்காளிபட்டி, ராசிபுரம், வெள்ளாளர் கல்வியியல் கல்லூரி-ஈரோடு, மற்றும் ராசி கல்வியியல் கல்லூரி ராசிபுரம் டவுன். பி.எட், விண்ணப்பங்களை நேரில் ரூ,500 பணமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற ரூ,550/-வரைவு காசோலையை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை-15 என்ற பெயரில் எடுத்து பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 577.அண்ணா சாலை, சென்னை-600 015 எனற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.நுழைவுத்தேர்வு ஆகஸ்டு 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை கீழ்கண்ட முக்கிய 8 நகரங்களில் நடைபெறும்: சென்னை, கோயமுத்தூர், மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம். நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நவம்பர் மாதம் நடைபெறும். பின்னர் பி.எட் வகுப்புகள் 2013  ஜனவரியில் துவங்கப்படும்.  மேலும் விவரங்களுக்கு 044-24306658 மற்றும் 044-24306600  எண்களை தொடர்பு கொள்ளலாம்.

About