குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தனது பெயர் பேசப்படுவது குறித்து, தனக்கு எதுவும் தெரியாது என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை 25ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அல்லது பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக பிரணாப் நிறுத்தப்பட்டால் ஆதரவளிப்பேன் என திமுக தலைவர் கருணாநிதியும் கூறியுள்ளார். ஆனால், தற்போது வங்கதேசத்தில் உள்ள பிரணாப்பிடம் செய்தியாளர்கள கேட்ட போது, இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என பிரணாப் முகர்ஜி கூறினார்.

Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments