ஆப்கான் எல்லை பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் ஒன்றில் தலிபான்களுக்கும் ராணுவ வீரர்களுக்குமிடையே நடைபெற்ற சண்டையில் 14 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்கள் அனைவரின் தலைகளையும் துண்டித்த தலிபான்கள் இருவரின் தலைகளை நகரின் மத்திய பகுதியில் மரக்கம்பத்தில் தொங்கவிட்டனர். மேலும் ஒருவரை தூக்கில் தொங்கவிட்டனர். பாகிஸ்தானில், வடக்கு வசிரிஷ்தான் பகுதியில் முகாமிட்டிருக்கும் தலிபான் தீவிரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இதற்கு எதிர்காலத்தில் இப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. மேலும் நாட்டின் பிற பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால் குறைந்த அளவிலான வீரர்களையே ஆப்கான் எல்லை பகுதியில் நிறுத்த முடிகிறதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
08:34
Tags :
world news
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments