Saturday, May 12, 2012

thumbnail

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவமனையின் டீன் கனகசபை


தமிழகத்தில் போதிய அளவுக்கு செவிலியர்கள் உள்ளதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் கனகசபை தெரிவித்துள்ளார்.
12-05-2012 அன்று வெளியிட்டது

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சென்னை அரசு பொது மருத்துமனையில் நாள்தோறும் 12 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சைப் பெற்று செல்வதாக கூறினார். உள்நோயாளிகளாக 3 ஆயிரம் பேர் உள்ளதாகவும், அவர்களுக்கு 2 ஆயிரம் செவிலியர்கள் சிறப்பாக சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறினார். தமிழகத்தில் தான் அதிகளவில் செவிலியர்கள் பயிற்சிக் கல்லூரிகள் உள்ளதாவும், இதன் மூலம் சிறந்த, தகுதிவாய்ந்த செவிலியர்கள் பயிற்சிப் பெற்று வெளியே வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பணியை விரும்பி ஏற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள செவிலியர்கள், சேவை மனப்பான்மையுடனும், மனநிறைவுடனும் இதனை செய்துவருவதாக கூறினர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About