Sunday, May 06, 2012

thumbnail

ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புதின், இன்று அதிபராகப் பதவியேற்றுக் கொள்கிறார்.

ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புதின், இன்று அதிபராகப் பதவியேற்றுக் கொள்கிறார்.


ரஷ்ய அதிபராக 3வது முறையாக பொறுப்பேற்க உள்ள அதிபர் புதின், அப்பதவியில் 6 ஆண்டுகள் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை ரஷ்ய அதிபராகப் பதவி வகித்த புதின், கடந்த 2008ம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்து விலகி பிரதமராகப் பொறுப்பேற்றார். அப்போது பிரதமராக இருந்த புதினின் நண்பரும், ஆதரவாளருமான திமித்ரி மெத்வதேவ் ரஷ்யாவின் அதிபரானார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெடற்ற அதிபர் தேர்தலில், விளாடிமிர் புதின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், ரஷ்ய அதிபராக புதின் இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்கிறார். இதனிடையே, புதின் அதிபராக பதவியேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About