Tuesday, May 08, 2012

thumbnail

பறக்கும் சாலைக்கு எதிர்த்து மீனவ குடும்பங்கள் போராட்டம்

சென்னை எண்ணூரில் இருந்து துறைமுகம் வரை அமைக்கப்பட உள்ள பறக்கும் சாலைக்காக வெளியேற்றப்படுவதை கண்டித்து திருவொற்றியூரில் 500 மீனவ குடும்பங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தைச் சேர்ந்த அவர்கள், மத்திய எர்ணாவூரில் ஒதுக்கப்பட்டுள்ள வீட்டு வசதி வாரியத்தின் வீடு தங்களுக்கு தேவையில்லை என்று கூறியுள்ளனர். சாலை அமைப்பது போக எஞ்சிய இடத்தில் தாங்கள் வசித்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் எண்ணூர் - துறைமுகம் இடையே பறக்கும் சாலை அமைப்பதற்காக நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தில் மீனவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About