Monday, October 29, 2012

thumbnail

கொசுவை ஒழிக்க இரு எளிய வழிகள்

1.கொசுவை விரட்டும் பாசி...
ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்..! கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செலவு செய்கிறோம். அசோலா என்ற பாசியை வளர்த்தால், அந்த வீட்டுப் பக்கம் கொசுக்கள் எட்டிப்பார்க்கா து. இந்த பாசியை வடை, போண்டா, பஜ்ஜி... என்று பலகாரம் செய்தும் சாப்பிடலாம். அற்புதமான ருசியில் இருக்கும். புரதச் சத்துக் கொண்ட இந்த பாசியை ஆடு, மாடு, கோழிகளுக்கும் கொடுக்கலாம். வ

ிவசாயிகள் இதை நெல் வயலில் வளர்க்கலாம். இந்த பாசி காற்றில் உள்ள தழைச்சத்துக்களை இழுத்து, பயிருக்கு கொடுக்கும். அதனால், ஆயிரக்கணக்கில் செலவுசெய்து இரசாயன உரம் போட தேவையில்லை. அசோலாவை வளர்ப்பதால், வயலில் களைகளும் வளராது. நீர் ஆவியாவதும் தடுக்கப்படுகிறது.
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவை தொடர்பு கொள்ளுங்கள். இதோ அவர்கள் தொலைபேசி எண்:04652 246296.

2.டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி..




டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Step1

ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

Step2

கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.

Step3

அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)

Step4

வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.

Step5

இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.

Step6

இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.

இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.

Sunday, October 28, 2012

thumbnail

புதிய மத்திய அமைச்சர்களாக மொத்தம் 22 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்

மத்திய அமைச்சரவையில் இன்று
புதிய கேபினட் அமைச்சர்களாக

1.ரகுமான் கான்,
2. தின்ஷா படேல்,
3.அஜய் மாக்கன்,
4.பல்லம் ராஜு,
5.அஸ்வினி குமார்,
6.ஹரிஷ் ராவத்,
7.சந்திரேஷ் குமாரி, ஆகியோர் பதவி பதவி ஏற்றனர்.

தனிப் பொறுப்புள்ள புதிய இணை அமைச்சர்களாக

1.மணீஷ் திவாரி,
2.சிரஞ்சீவி,பொறுப்பேற்றனர்.

புதிய இணை அமைச்சர்களாக
1.சசி தரூர்,
2.சுரேஷ்,
3.தாரிக் அன்வர்,
4.ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி,
5.ராணி நாரா,
6.அதிர் ரஞ்சன் சவுத்திரி,
7.அபு காசம் கான் சவு்த்திரி,
8.சத்யநாராயணா,
9.நினாங் எரிங்,
10தீபா தாஸ் முன்ஷி,
11.பல்ராம் நாயக்,
12.கிருபாராணி கில்லி
13.லால்சந்த் கடாரியா பதவி ஏற்றனர்.

வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவை தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், அம்பிகா சோனி,
முகுல் வாஸ்னிக்,
சுபோத் காந்த் சகாய்,
மகாதேவ் கண்டேலா,
வின்சென்ட் பாலா,
 அகதா சங்மா
ஆகியோர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 22 பேர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வரும், 2014ம் ஆண்டு, லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும், 2014ல், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில், மத்திய அமைச்சரவையிலும், காங்கிரஸ் கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் கொண்டு வர, கட்சித் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் திட்டமிட்டனர்.கடந்த மூன்று நாட்களாக, தினமும் இருவரும் சந்தித்து, இதுதொடர்பாகதீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்

Friday, October 26, 2012

thumbnail

ஓராண்டு கடந்தும் அணுக் கதிர்வீச்சு : ஃபுகுஷிமா பேரழிவின் தொடர்கதை


புகுஷிமா அணு உலை விபத்து நிகழ்ந்து ஓராண்டு கடந்தபோதிலும் ஜப்பானிலுள்ள மீன்களில் தற்போதும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. கென் புஸெலர் என்ற வேதியியல் விஞ்ஞானி நடத்திய ஆய்வில் அதிர்ச்சியூட்டும் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஃபுகுஷிமா அணு உலை அருகே கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட மீன்களை ஆய்வுசெய்தபோது அணுகதிர்வீச்சுத் தன்மை வாய்ந்த சீசியம் (caesium) அளவு, நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை உறுதிசெய்துள்ள விஞ்ஞானி புஸெலர், புகுஷிமா அணு உலையில் இருந்து தற்போதும் கதிர்வீச்சு கசிய வாய்ப்பிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும் கடற்பாசி, மட்டி ஆகியவற்றிலும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதால் கடலுக்கு அடியில் கதிர்வீச்சுப் பொருள் படிந்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளார். இதனிடையே மீன்களில் பரவியிருக்கும் கதிர்வீச்சு இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என வேதி விஞ்ஞானி புஸெலர் கவலை தெரிவித்துள்ளார்.
thumbnail

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடபடும் -டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன்

எம்.பி.பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்ணை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் உயர்த்தியதற்கு அகில இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் ஆண்டு தேர்வு எழுதிய எம்.பி.பி.எஸ். மாணவர்களின் தேர்வு முடிவுகள் புதிய விதிமுறைகளின் அடிப்படையில் (ஒவ்வொரு பாடத்திலும் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.) இன்று வெளியிடப்படுவதாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியது:
இந்திய மருத்துவக் கவுன்சிலின் அடிப்படை விதிமுறைகளுக்கு முரண்படாத வகையில், மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகப்படுத்தும் நோக்கில், புதிய விதிகளை எல்லா மருத்துவப் பல்கலைக்கழகங்களும் உருவாக்கலாம் என்று மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் என்பது தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த எங்கள் பல்கலைக்கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் முக்கிய மைல்கல்லாகும்.
60 சதவீதம் பேர் தேர்ச்சி: இந்த புதிய விதிமுறைகளின்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும்.
புதிய விதிமுறைகளின்படி இந்த ஆண்டு தேர்வு எழுதிய 3 ஆயிரத்து 565 மாணவர்களில் உத்தேசமாக 2 ஆயிரத்து 158 பேர் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது. இதன்படி மொத்தம் 60 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 52 சதவீத மாணவர்களும், அரசுக் கல்லூரி மாணவர்கள் 66 சதவீதம் பேரும் தேர்ச்சி பெறும் வாய்ப்புள்ளது.
கருணை மதிப்பெண்: எனினும், மொத்தமுள்ள மூன்று பாடங்களில் இரண்டில் தேர்ச்சி அடைந்து, ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மட்டும் அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்துள்ளோம். இதனால் தேர்ச்சி விகிதம் 65 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் என்றார் அவர்.
இந்த நிலையில் தகுதி மதிப்பெண்ணை உயர்த்தி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வகுத்த புதிய விதிமுறைகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுவதாகவும் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் தெரிவித்தார்.

Sunday, October 14, 2012

thumbnail

சென்னை-திருவனந்தபுரம் புல்லட் ரயில் பாதைக்கு "ஓகே'

புதுடில்லி:சென்னை - திருவனந்தபுரம் இடையே புல்லட் ரயில் பாதை அமைக்க சாதகமான வாய்ப்புகள் உள்ளது, என, ஆய்வு நடத்திய ஜப்பான் குழு ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை - திருவனந்தபுரம் இடையே, பெங்களூரு, கோவை, எர்ணாகுளம் வழியாக, 850 கி.மீ., தூரத்திற்கு, புல்லட் ரயில் இயக்கும் வகையில், அதிவேக ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான, சாதக வாய்ப்புகள் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, மத்திய ரயில்வே அமைச்சகம் ஜப்பான் ரயில்வே தொழில்நுட்ப சேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருந்தது.இதன்படி, ஜப்பான் ரயில்வே தொழில்நுட்ப குழுவினர், தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் முதற்கட்டமாக, இக்குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில், அளிக்கப்பட்ட தொழில்நுட்ப குறிப்புகள், நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக, ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.ஜப்பான் குழு அடுத்த அளிக்கும் அறிக்கையில், திட்டத்திற்கு ஆகும் செலவு உட்பட நிதி விவரங்கள் அடங்கிய மதிப்பீடு இருக்கும்.

இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பாதைகளில் மட்டும் புல்லட் ரயில் இயக்கும் வகையில், அதிவேக ரயில்பாதை அமைக்கப்படுகிறது. இதில், மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
thumbnail

தெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக அரசு புது திட்டம்


கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை, சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகளாக மாற்ற, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை கோரியுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, சூரிய சக்தி தெரு விளக்குகள்பொருத்தப்படுகின்றன. தமிழகத்தில் நிலவும், கடும் மின் பற்றாக் குறையால், மின் வினியோகம் கடுமையாக பாதித்துள்ளது. மேலும், தெரு விளக்குகளால் ஏற்படும் மின் கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பெரும் சுமையாக உள்ளது.பல கிராம ஊராட்சிகளுக்கு, தெரு விளக்கு மின் கட்டணத்தைச் செலுத்தக் கூட நிதியில்லை. இந்த, இக்கட்டான நிலையில், மின் சிக்கனம், செலவை குறைத்தல் ஆகியவற்றுக்காக, மாற்று எரிசக்திக்கு, தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.இதன் ஒரு கட்டமாக, கிராம ஊராட்சிகளில் உள்ள, ஒரு லட்சம் தெரு விளக்குகள், சூரிய சக்தி தெரு விளக்குகளாக மாற்றும் திட்டம், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சூரிய சக்தியையும் சிக்கனமாகப் பயன்படுத்த, சதாரண குழல் விளக்குகளுக்கு பதில், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தவும் முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்து, ஆண்டுக்கு, 20 ஆயிரம் தெரு விளக்குகள் என, ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் தெரு விளக்குகளை, சூரிய சக்தி விளக்குகளாக மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், 20 ஆயிரம் தெரு விளக்குகள், சூரிய சக்தி விளக்குகளாக மாற்றப்படுகின்றன. இதற்கு, 52.50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.சென்னை நீங்கலாக, 31 மாவட்டங்களிலும், கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 15 தெரு விளக்குகளை ஒரு தொகுப்பாகக் கொண்டு, சூரிய சக்தியை ஈர்த்து, மின்சாரமாக மாற்றும் தகடுகள் அமைக்கப்படுகின்றன. இத்தொகுப்பு, 600 வாட்ஸ் மின்சக்தியை உற்பத்தி செய்வதாக அமைக்கப்படுகிறது.சூரிய சக்தி மின் விளக்குகள் அனைத்தும், "ரிமோட் கன்ட்ரோல்' முறையில், பராமரிக்கும் முறையும் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, தமிழகத்தை தெற்கு, வடக்கு என, இரு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். இம்மண்டலங்களில், சூரிய சக்தி தெரு விளக்குகளை அமைக்கும் நிறுவனம், தலைமையகங்களை அமைத்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.சென்னை நீங்கலாக, மீதமுள்ள மாவட்டங்களில், தெற்கு மண்டலத்தில், 16 மாவட்டங்களும், வடக்கு மண்டலத்தில், 15 மாவட்டங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. அரியலூர், கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகபட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம் ஆகிய, 15 மாவட்டங்கள், வடக்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய, 16 மாவட்டங்கள், தெற்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை, சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகளாக மாற்ற, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை கோரியுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் தொடர்ந்து வரும் மின்வெட்டால், பெரும்பான்மையான கிராமப் பகுதிகள் இருண்டுள்ளன. இந்நிலையில், சூரிய சக்தி மூலம், தெரு விளக்குகள் அமைக்கும் திட்டத்தின் அவசியம் குறித்து, அரசு உணர்ந்துள்ளதால், இதை விரைந்து செயல்படுத்த, நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
thumbnail

நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க., அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு

மாஜி தி.மு.க., அமைச்சர் நேருவின் தம்பி, அரசு புறம்ப‌ோக்கு நிலத்தை ஆக்கிரமித்து அரிசி ஆலை கட்டியிருந்ததாக எழுந்த புகாரை அடுத்து, ஆலையின் ஒருபகுதியை இடிக்கும் பணி நடந்து வருகிறது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.‌என். நேரு. இவரது தம்பி மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை, திருச்சி லால்குடி சாலையில் பூவாளூர் அருகே அரசு புறம்ப‌ோக்கு நிலத்தை ஆக்கிரமித்து ஆலை கட்டியிருப்பதாக புகார் எழுந்தது. இந்த ஆலை வளாகப்பகுதியில் மொத்தம் ஆயிரத்து 200 சதுர அடி புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக அலுவலர்கள் புகார் கூறினர். ஆனால் இதற்கு சமமான பட்டா நிலத்தைக் கொடுத்திருப்பதாக நேரு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இது இன்னமும் கலெக்டரின் பரிசீலனையிலேயே உள்ளது.
thumbnail

பாகிஸ்தானில் சுடப்பட்ட மாணவி மலாலா யூசூப்ஸாயிக்கு உதவ துபாய் முடிவு

பெண்கள் உரிமைக்காக போராடி வரும், பள்ளி மாணவி மலாலா யூசூப்ஸாய் கடந்த செவ்வாய் அன்று பள்ளிப் பேருந்திலேயே வைத்து தலிபான்களால் தலையில் சுடப்பட்டாள். உயிருக்குப் போராடிய அவள் மீட்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப் பட்டுவருகிறது. சிகிச்சையில் மெதுவான முன்னேற்றம் கண்டாலும், அவளை வெளிநாட்டுக்கு எடுத்துசென்று மேல்சிகிச்சை மேற்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
 
இந்நிலையில், பாகிஸ்தான் மருத்துவர்களின் வேண்டுகோளை ஏற்று, துபாய் நாட்டின் அரசக்குடும்பத்தினர் மலாலா யூசூப்ஸாயிக்கு உதவ முன்வந்துள்ளனர். அவளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 6 மருத்துவர் குழுவுடன் சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம் ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்பவும் ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. 
 
அவளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல அரசு ஒப்புதல் அளிக்கிற வரை இந்த ஆம்புலன்ஸ் விமானம் இஸ்லாமாபாத்திலேயே இருக்கும்.  துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள 3 மருத்துவமனைகளில் அவளுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அபுதாபிக்கான பாகிஸ்தான் தூதர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளின் குண்டுகள் துளைக்கப்பட்ட பாகிஸ்தானின் 14 வயது போராளிச் சிறுமி மலாலா யூஸுஃப்ஸயீ-யின் மீண்டெழுந்து வருவதற்கு பாகிஸ்தான் நாடு மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களும், சிறார்களும் பிரார்த்தனை செய்து
வருகிறார்கள்.

மலாலாவின் மகத்தான வாழ்க்கைக் குறிப்பு இது... 
பாகிஸ்தானின் தாலிபான் பயங்கரவாதிகள் ஸ்வாத் பள்ளத்தாக்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது, சிறுமி மலாலாவுக்கு வயது 11. ஸ்வாத் பகுதியில் உள்ள பெண்கள் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்பது தாலிபான்களின் உத்தரவு.

அந்த இக்கட்டானச் சூழலில், மலாலா செய்த காரியம் வியப்புக்கு உரியது. அவர் தான் எழுதிய டயரிக் குறிப்புகளை புனைப் பெயர் ஒன்றில் பிபிசி உருது மொழிப் பிரிவுக்கு அனுப்பினார். அதில், பயங்கரவாதிகளால் தங்கள் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பதிவு செய்தார். குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதைச் சொன்னார். ஸ்வாத் பகுதியின் உண்மை நிலை உலகுக்குத் தெரிந்தது. விளைவு... அப்பகுதியில் இருந்து தாலிபான் பயங்கரவாதிகள் விரட்டப்பட்டனர்.

இவையெல்லாம் நடந்தபின்புதான் தெரியும் அந்த டயரிக் குறிப்புகளை அனுப்பி வந்தது சிறுமி மலாலா என்பது. அவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. போராளிச் சிறுமிக்குத் தீரச் செயலுக்கான தேசிய விருதும் கிடைத்தது. மலாலாவின் பெயர், சிறார்களுக்கான சர்வதேச அமைதி விருது ஒன்றுக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

"பெரியவள் ஆகும்போது சட்டம் படித்து அரசியலுக்கு வரவேண்டும். கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் நாடாக பாகிஸ்தான் விளங்க வேண்டும்." - இதுவே நம் மலாலாவின் கனவு.

*

இந்தச் சூழலில்தான் மலாலாவைப் பழிவாங்கி இருக்கிறார்கள் பயங்கரவாதிகள். சிறுமியைக் கொல்வதற்குத் திட்டமிட்டனர். அதன்படி, பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தவரை, அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் மலாலா படுகாயம் அடைந்தார்.

இப்போது, மலாலா தன் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீண்டு வருவதற்கு பாகிஸ்தான் தேசம் இன்று நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது.
 
thumbnail

வெனிசுலா அதிபர் தேர்தலில் சாவேஸ்-இலத்தீன் அமெரிக்காவின் தன்னிகரற்ற தலைவராக வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார்.

வெனிசுலா அதிபர் தேர்தலில் சாவேஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இலத்தீன் அமெரிக்காவின் தன்னிகரற்ற தலைவராக வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார். அவர் 54 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் கவுன்சில் தலைவர் லூசெனா அறிவித்தார்.இவ்வெற்றியின் மூலம் அடுத்த 6 வருடங்களுக்கு சாவேஸ் வெனிசுலாவின் அதிபராக செயல்படுவார். வெனிசுலா நாட்டின் அதிபரான ஹுகோ சாவேஸ் கடந்த 14 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக உள்ளார். அமெரிக்காவின் பரம வைரியான அவரை தோற்கடிக்க வெனிசுலாவின் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து ஹென்ரிக் கேப்ரில்ஸை வேட்பாளராக நிறுத்தினார். முடிவில் (54%) 74 லட்சத்துக்கு 44 ஆயிரத்து 82 வாக்குகள் பெற்று, சாவேஸ் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கேப்ரிலஸிஸ் 61 லட்சத்துக்கு 51 ஆயிரத்து, 544 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். கச்சா எண்ணெய் உறபத்தியின் மூலம் வரும் வருமானத்தை ஏழைகளின் வளர்ச்சிக்கு உதவி செய்வதால், இவரை பெரும்பான்மையான முதலாளித்துவவாதிகளுக்கு அறவே பிடிக்காது. மேலும் இவரை எப்படியேனும் புதிய இளம் தலைமுறைத் தலைவர்களை வைத்து கவிழ்த்துவிடலாம் என்ற திட்டமும் தவிடு பொடியாகிவிட்டது. புற்று நோய் எப்படியும் காவு கொண்டுவிடும் என்று இருமாந்த முதலாளித்துவவாதிகளுக்கு அதில் இருந்து சாவேஸ் பிழைத்து வந்ததே பெரும் ஏமாற்றமாக இருந்தது. இப்பொழுதைய இந்த வெற்றி முதலாளித்துவவாதிகளை அடக்கி வாசிக்க வைக்கும். ஆனால் பொதுமக்களுக்கோ மிகவும் உற்சாகம். சாவேஸின் வெற்றியை பொதுமக்கள் கூக்குரலிட்டு ஆரவாரம் செய்தனர். “சாவேஸே எங்களது சந்தோசம். அவர் தொடர்ந்து ஏழைகளையும், சக்தியற்றவர்களையும் பாதுகாப்பார்” என்றார் 54 வயதான கிளாடிஸ் மோண்டிஜோ. “உங்களது வெற்றி, எங்களது வெற்றி,” என்றார் அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ட்விட்டரின் மூலமாக. சாவேஸின் வெற்றியினைத் தொடர்ந்து முதலாளித்துவ நாடுகள் தள்ளி நின்றாலும் அவரது நேச நாடுகளான சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் பெலாரஸ் போன்ற நாடுகள் தங்களது பொருளாதரத்தை வெனிசுலாவில் தொடர்ந்து முதலீடு செய்துவருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Saturday, October 06, 2012

thumbnail

ராமநாதபுரம் அருகே புற்றுநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் இருந்து 15 நிமிட பயணத் தூரத்தில் உடையநாதபுரம் என்ற கிராமம் உள்ளது. சுமார் 2 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் புற்றுநோயின் தாக்குதல் அதிக அளவில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. புற்றுநோய் காரணமாக, பலர் இளம் வயதிலேயே அனாதைகளாகி விட்டதாக இந்தக் கிராம மக்கள் கூறுகிறார்கள் .
வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்தக் கிராமத்தில், பெரிய அளவில் வேலை வாய்ப்புகளோ, தொழில் வாய்ப்புகளோ கிடையாது. போதிய விழிப்புணர்வும் மருத்துவ வசதிகளும் இல்லாததால், புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியவும் இவர்களால் முடியவில்லை.
இந்தக் கிராமம் குறித்து சுகாதாரத் துறையினரிடம் கேட்டபோது, வாழ்க்கை முறைகளும், சுத்தமின்மையுமே கிராம மக்களுக்கு புற்றுநோய் வருவதற்குக் காரணம் என்று தெரிவித்தனர். எனினும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதாகக் கூறப்படும் தகவலை அவர்கள் உறுதிசெய்யவில்லை.
இந்தக் கிராமம் தொடர்பாக புதிய தலைமுறை தெரிவித்த தகவலையடுத்து, ஒரு குழு அமைத்து இங்குள்ள கிராமப் பகுதிகளில் சோதனை நடத்த இருப்பதாக மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநர் பாலச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.
thumbnail

இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கவுள்ள பைனலில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன

இலங்கையுடன் மோதல்:இன்று  கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கவுள்ள பைனலில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.33 ஆண்டுகளுக்கு பின்… நேற்றைய அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக கோப்பை தொடர்களில் (50, 20 ஓவர் சேர்த்து) 33 ஆண்டுகளுக்கு பின் பைனலுக்கு முன்னேறியது. கடைசியாக 1979ல் நடந்த 50 ஓவர் உலக கோப்பை தொடரில் பைனலுக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 1996 (50 ஓவர்), 2009ல் (டுவென்டி-20) நடந்த உலக கோப்பை தொடர்களில் அரையிறுதி வரை சென்றது.
* “டுவென்டி-20 உலக கோப்பை வரலாற்றில் பைனலுக்கு முன்னேறுவது இதுவே முதன்முறை. முன்னதாக 2009ல் அரையிறுதி வரை முன்னேறியது.
* ஐ.சி.சி., சார்பில் நடத்தபடும் தொடர்களில் 2006ம் ஆண்டுக்கு பின், முதன்முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது. கடந்த 2006ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து இரண்டாவது இடம் பிடித்தது.
பழிதீர்த்தது
லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் “பி பிரிவில் இடம் பெற்றிருந்தன. இவ்விரு அணிகள் மோதிய லீக் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட, “டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இத்தோல்விக்கு நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி பழிதீர்த்தது.
200வது சிக்சர்
ஆஸ்திரேலியாவின் தோகர்டி வீசிய 6வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல். இது, இத்தொடரின் 200வது சிக்சராக அமைந்தது. முதல் சிக்சரை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கையின் ஜீவன் மெண்டிஸ் அடித்தார். 100வது சிக்சர் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கையின் தில்ஷன் அடித்தார்.
இதுவே அதிகம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 205 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இத்தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கொழும்புவில் நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது.
thumbnail

ஹவாய்-லானைத் தீவை சுற்றுச்சூழல் நிறைந்த சொர்க்க பூமியாக மாற்ற ஆரக்கிள் அதிபர் திட்டம்

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ஆரக்கிள் கம்பெனியின் அதிபர் லார்ரி எல்லீசன். இவர் கடந்த ஜுன் மாதம் கோடீஸ்வரர் டேவிட் முர்டோக்கிடமிருந்து 365 சதுரகிலோமீட்டர் உள்ள இந்த லானை தீவின் 98 சதவிகித பகுதியை விலைக்கு வாங்கினார். இத்தீவில் இரண்டு பொழுதுபோக்கு அரண்மனைகளும், கோல்ப் விளையாட்டு மைதானங்களும், பலதரப்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளும் அங்கு உள்ளன. மேலும் அண்ணாசி பழமரத் தோப்புகளும் உள்ளன. 
 
இந்த தீவு குறித்து அவர் கூறியதாவது:-
 
எனது கனவு நிறைவேறுமானால், ஹவாய் தீவுகளில் ஒன்றான, இந்த லானைத் தீவை சுற்றுப்புற சூழல் நிறைந்த ஒரு சொர்க்க பூமியாக மாற்றுவேன். நான் நேசிக்கும் இந்த லானைத் தீவை ஒரு புதியத் திட்டத்திற்கு உரிய ஒரு மாதிரி நகரமாக மாற்றப் போகிறேன். தீவை சுற்றியுள்ள கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றுவேன். தீவு முழுமையும் சொட்டு நீர் பாசனத்துடன் கூடிய இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகளை உருவாக்கும் ஆர்கானிக் பண்ணைகளை நிறுவுவேன். அவ்வாறு விளைந்த உணவுப் பொருட்களை ஜப்பான் மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வேன். இந்த தொழில் செய்ய இத்தீவு மக்களுக்கு உதவுவேன். பேட்டரியில் ஓடும் கார்களை இங்கு பயன்படுத்துவோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
thumbnail

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஸ்பெண்டு: ஐகோர்ட்டு நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக இருப்பவர் கோவிந்தராஜுலு. இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதன் அடிப்படையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை பதிவாளர் உதயன் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. ராமநாதபுரம் சென்றும் இந்த குழு விசாரணை மேற்கொண்டது. தொடர்ந்து விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்ற ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் மேல் விசாரணை நடத்தி புகார்களின் அடிப்படையில் நீதிபதி கோவிந்த ராஜுலுவை சஸ்பெண்டு செய்தனர். இதற்கான உத்தரவை வழங்க சென்றபோது நீதிபதி வீட்டில் இல்லை. இதனை தொடர்ந்து அவரது வீட்டு கதவில் உத்தரவு நகலை அதிகாரிகள் ஒட்டி சென்றனர்.
thumbnail

ஜெயலலிதா, ஜெயகுமார் பதவியை பறித்த பின்னணி

ஜெயலலிதாவின் ஒவ்வொரு அமைச்சரவையிலும் தவறாமல் இடம்பிடிக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்த ஜெயக்குமார் தூக்கி எறியப்பட வேண்டுமென்றால், மகா வில்லங்கமான ‘எதிலோ’ சிக்கியிருக்க வேண்டும்.
செப்டம்பர் 18-ம் தேதி ஜெயக்குமாரின் 52-வது பிறந்தநாள். இந்த விழா கொண்டாட்டம்தான் அவருடைய பதவிக்கு உலை வைத்தது என்பது பொதுப்படையாக வெளியே அடிபடும் பேச்சு.அடுத்து அண்ணனுக்கு ஏற்பட்ட முதலமைச்சர் நாற்காலி மீதான ஆசை!
“அம்மாவைத் தவிர வேறு யாரும் பிறந்தநாள் கொண்டாட முடியாது” என்பது அ.தி.மு.க-வின் எழுதப்படாத விதி. அதை மீறி ஜெயக்குமார் பிறந்தநாள் கொண்டாடியதும், பிறந்தநாள் விழாவில் ‘அடுத்த முதல்வர்’ என்று கோஷம் போட்ட விவகாரமும் அவருடைய பதவிக்கே வேட்டு வைத்துவிட்டது” என்கின்றனர் .இதன் பின்னனில் ஒரு பெண் பிரமுகர் கூறியதில் நம்பி ஜெயகுமார் மாட்டிகொண்டர்  என்கின்றனர் ஆ தி மு க தொண்டர்கள்
thumbnail

செம்மண் கொள்ளை குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது

            செஞ்சி: விழுப்புரம் மாவட்டத்தில் தனக்கென தனி செல்வாக்கு கொண்ட தி.மு.க.,மாஜி அமைச்சர் பொன்முடி செம்மண் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். முன்னதாக செஞ்சியில் நடந்த போராட்டத்தில் கைது செய்ய முற்பட்டபோது கட்சி தொண்டர்கள் மறியல் செய்து போலீசார் கைது செய்ய விடாமல் தடுத்தனர். அங்கிருந்து விழுப்புரம் புறப்பட்ட பொன்முடி பல கார்களில் மாறி, மாறி ஏறி தி.மு.க, நகர அலுவலகத்திற்கு வந்தார். இங்கு சுற்றிவளைத்த போலீசார் பொன்முடியை கைது செய்து அழைத்து சென்றனர்.
                
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாசில்தார் கொடுத்த தகவலின் அடிப்படையில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் சட்டத்தின் கீழும் ஊழல் ஒழிப்பு சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ் பொன்முடி எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பட்டா நிலங்களில் இருந்து செம்மண் அள்ளியதில் நடந்த முறைகேடுகள் செய்ததாக பொன்முடி மீது குற்றம்சாட்டப்படுகிறது.

முந்திய திமுக அரசில் உயர்கல்வி, சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் போன்ற துறைகளுக்கு அமைச்சராக இருந்த பொன்முடி கட்சியின் முன்னணித் தலைவரும் ஆவார்.


thumbnail

தண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அடைப்புதண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அடைப்பு

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.கன்னட சலுவேலியா, கன்னட ரட்சக வேதியா, கன்னட விவசாய சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடைபெறும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் மாநிலத்தில், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
அம்மாநில அரசியல் கட்சிகள் பலவும் இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.
மருத்துவர் சங்கங்கள், வழக்கறிஞர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், நடிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகள் கர்நாடக எல்லைப் பகுதிகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவின் பேங்களூர், மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும், லாரிகளும் தமிழக எல்லைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
thumbnail

புதிய அமைச்சர் ப.மோகன் பதவியேற்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா அண்மையில் அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்தார். இதன்படி புதிதாக அமைச்சரவைக்குத் தேர்வு செய்யப்பட்ட ப.மோகன் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில், ஆளுநர் கே.ரோசய்யா ஊரக தொழில்துறை அமைச்சராகப் பதவி யேற்ற ப.மோகனுக்கு பதவிப் பிரமானமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
thumbnail

கருப்புச் சட்டை அணிந்து விலைவாசி உயர்வும், சட்டம் -ஒழுங்கு சீர்கேடு கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை நேற்று காலை திமுக தலைவர் கருணாநிதி துவக்கி வைத்தார்.

தமிழகம் மின்னொளி இல்லாமல் இருண்டுள்ள சூழ்நிலையிலும், விலைவாசி உயர்வும், சட்டம் -ஒழுங்கு சீர்கேடும், பத்திரிகை சுதந்திரத்தையே அடக்குகின்ற அவலத்தை கண்டித்து  அறவழியில் தமிழகம் முழுவதும் துண்டறிக்கை போராட்டம் கருப்புச் சட்டை அணிந்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை நேற்று காலை திமுக தலைவர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
 

Friday, October 05, 2012

thumbnail

பணம் பூமிக்கடியில் வளர்கிறது: மன்மோகன் சிங்குக்கு பாபா ராம்தேவ் பதிலடி

பணம் மரத்தில் காய்க்கவில்லை எனக் கூறிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பதிலடியாக, பணம் பூமிக்கடியில் வளர்கிறது என யோகாகுரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய ராம்தேவ், ‘பணம் பூமிக்கடியில் நிலக்கரி வடிவத்தில் வளர்கிறது என்பது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரியும். அதனால்தான் பணம் மரத்தில் காய்க்கவில்லை என அவர் கூறினார்’ என்றார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் எனவும் ராம்தேவ் கேட்டுக்கொண்டார். மேலும், ‘நிலக்கரி ஊழல்தான் உலகில் இதுவரை நடந்த ஊழல்களில் மிகப்பெரிய ஊழல். 400 லட்சம் கோடி ரூபாய் இதில் கையாடப்பட்டிருக்கிறது’ எனவும் ராம்தேவ் கூறினார்.
அப்போது, கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்ற தனது வழக்கமான கோரிக்கையையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ராம்தேவ், ‘எனக்கு யாருடனும் நட்போ, பகையோ கிடையாது. ஆனால் ஊழலில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்’ என்றார்.
thumbnail

Dr.MGR Medical university vice-chancellor Dr Mayil Vahanan Natarajan said

CHENNAI: At least 127 medical and dental students have been trying to get their degrees for the last 10 years. So far 857 students of the state medical university, including 217 pharmacy and 395 physiotherapy students, haven't been able to finish their courses even after double the duration of their course. Some medical students haven't completed their course for 24 years.

By next week, when the university releases the results for first year MBBS students, it will also announce that it has discharged 770 students, including 18 medicos, from the course.

The rest have been given a specific term to complete the course as they have applied for a one-time scheme that allows lagging students to clear papers. "Those who have completed double the term and have not availed the offer will not be able to continue their course," said university vice-chancellor Dr Mayil Vahanan Natarajan. Until 2011, students were allowed to repeat their examination every year. In August 2011, the university decided to fix a time frame. So, medical students can't continue their course if they do not pass out after 11 years.

Similarly, a nursing and pharmacy student has to complete her course in eight years. "There is no point in allowing them to continue. This is the best way to weed out students who aren't fit for the course. We have also decided to not give more than five grace marks," said Dr Natarajan. More MBBS and BDS students have been failing in exams in the last couple of years following stringent norms.

This year the pass percentage of final year dental students was 41% against 70% in 2011. Last year, the university relaxed the 50% minimum marks in each paper for MBBS students after nearly 40% of them failed to clear the exams.

On October 8, the university will again insist they secure 50% marks."This time students were informed in advance and they had adequate time to prepare," said an official.


thumbnail

அவதூறாக செய்தி வெளியிட்டதாக கருணாநிதி மீது மேலும் இரு வழக்குகள் பதிவு

திமுக தலைவர் கருணாநிதி மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அமைச்சர்கள் பச்சைமால், சிவபதி ஆகியோர் கருணாநிதி மீது அவதூறு வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இரண்டு அமைச்சர்களும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று தங்களை குறித்து அவதூறாக முரெசொலி பத்திரிகையில் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து தி.மு.க., தலைவர் கருணாநிதி மீதும், முரசொலி பத்திரிகை ஆசிரியர் செல்வம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஜெகன் அமைச்சர்கள் சார்பில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. ஏற்கனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியது குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக கருணாநிதி மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
thumbnail

புரட்டாசி மாதம் என்பதால் நாமக்கல்லில் 12 கோடி முட்டைகள் தேக்கம்


சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் சுமார் 300 கோழிப்பண்ணைகள் உள்ளது. இதன் மூலம் தினமும் சராசரியாக சுமார் 3 கோடியே 25 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும் தினசரி 50 லட்சம் முதல் 70 லட்சம் வரை ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, ஓமன், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவில் கடந்த மாதம் உயர்ந்தது.

இந்நிலையில் தற்போது புரட்டாசி மாதம் என்பதாலும், பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும் சத்துணவுக்கு அனுப்பபடும் முட்டையிலும் பாதிப்பு ஏற்பட்டதாலும் தமிழகம் முழுவதும் முட்டை விற்பனையில் சரிவு ஏற்பட்டது. இதன் அடிப்படையில் முட்டை கொள்முதல் விலை கடந்த மாதம் 24-ந் தேதி 1- காசுகள் குறைத்து ரூ. 3.55 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 

நேற்று மேலும் 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.3.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. முட்டைக் கொள்முதல் விலை மேலும் குறையக்கூடும் என்று நாமக்கல் மண்டல என்.இ.சி.சி. தலைவர் செல்வராஜ் கூறினார். அவர் மேலும் கூறும் போது,

புரட்டாசி மாதம் காரணமாக நாமக்கல் மண்டல முட்டை விற்பனையில் 15 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 6 கோடி முட்டைகள் வரை தேங்கியிருக்கும். ஆனால் இப்போது 12 கோடி முட்டைகள் வரை தேக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் டெல்லி, ஐதராபாத், மண்டலத்திலும் முட்டை விலை குறைந்துள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.
thumbnail

மணல் கொள்ளை: பொன்முடியை கைது செய்ய போலீஸ் தீவிரம்,/Dismisses anticipatory bail plea of former DMK minister K Ponmudi

விழுப்புரம் : தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் எங்கே இருக்கிறார் என தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொன்முடி செம்மண் அள்ளும் குத்தகை எடுத்திருந்தார். இதில் விதிமுறை மீறி மணல் அள்ளியதாக தாசில்தார் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதியப்பட்டுள்ளது. இது முதல் பொன்முடி தலைமறைவாக இருந்து வருகிறார். என்மீதும் , குடும்பத்தினர்மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. தம்மை கைது செய்தால் எனது புகழுக்கு களங்கம் ஏற்படும் எனவே தமக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். முனன்ஜாமினுக்கு அரசு தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி, பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்தார். இன்றைய கோர்ட் தீர்ப்பை அடுத்து பொன்முடியை கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
thumbnail

சோனியா பயணத்துக்கு அரசுப் பணம் செலவிடப்படவில்லை: பிரதமர் அலுவலகம் மறுப்பு

சோனியாவின் வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.1880 கோடி அரசுப் பணம் செலவிடப்பட்டதாக நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு பிரதமர் அலுவலகம் தனது மறுப்பைத் தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாவின் சிகிச்சைக்காக எந்த செலவும் செய்யவில்லை என்று மறுத்துள்ளது. மேலும், வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட வகையில், சிகிச்சைக்கான செலவாக ரூ.1880 கோடி மக்களின் வரிப்பணத்தில் இருந்து செலவு செய்யப்பட்டதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டையும் அது மறுத்துள்ளது.
இன்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
ஐ.மு.கூட்டணித் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அரசு செலவு செய்தது என்று கூறப்படும் குற்றச்சாட்டை தீவிரமாக எடுத்துக் கொண்டு அரசு விளக்கம் அளிக்க விரும்புகிறது. அவருக்கு ஆகும் பாதுகாப்புச் செலவுகள், சிறப்பு காவல் குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 8 வருடங்களில், பெல்ஜியம் அரசு விடுத்த அழைப்பை ஏற்று, தேசிய அளவிலான கௌரவ விருது பெற பெல்ஜியம் சென்றார் சோனியா. அதற்கான செலவு, இந்திய கலை உறவு பரிவர்த்தனை அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதுவும் ரூ.3 லட்சம் ரூபாய்தான். அதைத் தவிர ஐ.மு.கூட்டணித் தலைவரின் மருத்துவச் செலவுக்காக எந்தத் தொகையும் செலவிடப்படவில்லை...” என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களை மையமாகக் கொண்டு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இத்தகைய குற்றச்சாட்டை திங்கள் கிழமை முன்வைத்தார்.
thumbnail

டி-20 உலக கோப்பை இறு‌தி‌யி‌ல் இல‌ங்கை - பாகிஸ்தான் வெ‌ளியே‌றியது!

20 ஓவரஉலக கோப்பை கிரிக்கெட்டில் போ‌ட்டி‌ன் அரை‌யிறு‌தி ஆ‌ட்ட‌த்த‌ி‌ல் பாகிஸ்தா‌ன் அ‌ணியை 16 ர‌ன்‌னி‌ல் இலங்கை அணி ‌வீ‌ழ்‌த்‌‌தி இறுதிப்போட்டி‌க்கு செ‌ன்றது.

கொழும்பில் நே‌ற்‌றிரவு நடந்த முதலாவது அரை‌யிறுதியில் இலங்கையும், பாகிஸ்தானும் மோதின. டாஸ் வெ‌ன்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செ‌ய்தது. கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனேவும், தில்சானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி நீண்ட நேரம் நின்று ஆடினாலும், ரன் குவிக்க முடியாமல் திணறியது.

குறிப்பாக தில்சான் வழக்கத்திற்கு மாறாக பந்துகளை அதிகமாக ‌ிரயம் செய்தார். கேப்டன் ஜெயவர்த்தனே 36 ப‌ந்‌தி‌ல் 42 ரன்னு‌ம், தி‌ல்சான் 35 ரன்னு‌ம் எடு‌த்து ஆட்டம் இழந்தனர். கைவசம் விக்கெட்டுகள் இருந்தும், இறுதிவரை ஆட்டம் சூடுபிடிக்காமல் மந்தமாகவே நகர்ந்ததால், உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றத்திற்குள்ளானார்கள்.

கடைசி ஓவரில் மட்டும் ஆறுதல் அளிக்கும் வகையில் 3 பவுண்டரி உள்பட 16 ரன்களை இலங்கை ஜோடி திரட்டியது. ஆனால் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது. இலங்கை பேட்ஸ்மேன்கள் தங்களது இன்னிங்சில் மொத்தம் 54 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் வீணாக்கியது குறிப்பிடத்தக்கது.

பி‌ன்ன‌ர் ‌விளையாடிய பாகிஸ்தானுக்கு, இலங்கை பவுலர்கள் பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் தொடக்க ஜோடி ஓரளவு நல்ல தொடக்கம் தந்த போதிலும் அதனை மிடில்வரிசை பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக்கொள்ள தவறினர். பந்து வீச்சாளர்களின் சொர்க்கமாக திகழ்ந்த இந்த ஆடுகளத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க முடியாமல் தொடர்ந்து தவித்தனர்.

ஹெராத், அஜந்தா மென்டிசின் சுழலில் சிக்கிய அவர்களால் அதில் இருந்து கடைசி வரை மீளவே முடியவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய பாகிஸ்தான் அணியால் 7 விக்கெட்டுக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் முகமது ஹபீஸ் 42 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஏற்கனவே 2009-ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதிவரை வந்து பாகிஸ்தானிடம் கோப்பையை கோட்டை விட்டிருந்தது. இந்த தோல்விக்கு இப்போது இலங்கை அணி வஞ்சம் தீர்த்துக் கொண்டது.

இதற்கு முன்பு இந்த மைதானத்தில் 4 முறை 20 ஓவர் கிரிக்கெட்டில் தோற்றிருந்த இலங்கை அணி முதல் முறையாக இங்கு வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இலங்கை அணி வரு‌ம் 7ஆ‌ம் தே‌தி நடக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்‌ட்ரேலியா அ‌ல்லது மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அணியை சந்திக்கும்.
thumbnail

ஒரிசாவில் இன்று நடந்த தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் பாதுகாப்புக்காக பல ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று பிருத்வி-2 ரக ஏவுகணை சோதனை  வெற்றிகரமாக நடந்தது. அடுத்த கட்டமாக இன்று ஒரிசா கடற்கரை பகுதியில் தனுஷ் அணு ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக நடந்தது. இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாகும்.

மேலும் 500 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் ஆற்றல் பெற்றது. இந்த ஏவுகணை 8.53 மீட்டர் நீளமும், 0.9 மீட்டர் விட்டமும் கொண்டது. இது கப்பல் படை பயன்பாட்டிற்கும் தலையில் உள்ள இல
thumbnail

தமிழகத்திலும் அகவிலைப்படி உயர்ந்தது; அரசு ஊழியர்களுக்கு கொடுத்தார் ஜெ.,

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த சில நாட்களில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஜெ., உத்தரவு பிறப்பித்தார். இவரது அறிவிப்புக்கு அரசு ஊழியர் சங்கத்தினர் வரவேற்பும் மகிழச்சியும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஏறிவரும் விலைவாசிக்கு ஏற்றாற்போல மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதம் உயர்த்தி வழங்கியது. இதனையடுத்து மாநில அரசுகளும் தங்களின் அறிவிப்பை வெளியிடும். அரசு ஊழியர்களுக்கு சலுகை செய்யும் அரசு என்று பெயர் பெற்ற தி.மு.க., அரசு , மத்திய அரசு அறிவித்த 24 மணி நேரத்தில் அறிவித்து விடும். அ.தி.மு.க,. அரசு அறிவிக்குமா, தருமா? தராதா என்ற அச்சத்திலேயே அரசு ஊழியர்கள் இருப்பர். வழக்கம் போல் இந்த ஆண்டிற்கான அகவிலைப்படியை உயர்த்தி தமிழக முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார்.

Thursday, October 04, 2012

thumbnail

விக்கிரவாண்டியில் 20 டன் இரும்பு லோடுடன் நின்ற லாரி மாயம்


விக்கிரவாண்டியில் 20 டன் இரும்பு லோடுடன் நின்றிருந்த லாரி திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
சென்னையிலிருந்து 20 டன் இரும்பு லோடு ஏற்றிய லாரி ஜெயங்கொணடம் நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது.
ஓட்டுனர் டீ குடிப்பதற்காக விக்கிரவாண்டி அருகே கப்பையாம்புலியூரில் லாரியை நிறுத்திவிட்டு டீ குடித்துவிட்டு வந்து பார்த்தபோது லாரியைக் காணவில்லை. இதன் மதிப்பு ரூ. 9 லட்சம். இது குறித்து ஓட்டுனர் லாரி உரிமையாளர் பண்ருட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். விக்கிரவாண்டி போலீஸில் ராதாகிருஷ்ணன், புகார் தெரிவித்தார். ஆய்வாளர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
thumbnail

காவிரி: மத்தியக் குழு தமிழகம் வந்தது

கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டிற்குமிடையே காவிரி நீர்ப் பிரச்சனை தொடர்பாக பதட்டமானதொரு சூழல் உருவாகியிருக்கும் நிலையில் இரு மாநிலங்களிலும் அணைகளின் நீர் நிலவரம், பயிர் நிலை, தமிழகத்திற்கு நீர்வரத்து உள்ளிட்டவற்றை ஆராயவென மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான குழு இன்று வியாழன் தமிழகம் வந்தது.
முதற்கட்டமாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் துருவ் விஜய் சிங் தலைமயிலான அக்குழு அரசு தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியையும் மற்றும் மூத்த அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தியது.
நிபுணர் குழு இன்னமும் நான்கு நாட்களில் தனது அறிக்கையினை காவிரி கண்காணிப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே காவிரியில் இருந்து தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
கர்நாடக மாநிலத்திலோ காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்தும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், எதிர்வரும் அக்டோபர் 6ஆம் நாள் முழுக்கடையடைப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பெங்களூர் தமிழ் சங்கமும் கடையடைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
thumbnail

பள்ளிக் கூடங்களில் கழிப்பறை வசதி கட்டாயம்

இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்த ஆறு மாதத்துக்குள் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துத் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பெண்கள் படிக்கும் பள்ளிக் கூடங்களில் கழிப்பறைகளைக் கட்டித் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி உத்தரவிட்டது. கழிப்பறை இல்லாத பள்ளிக் கூடங்களுக்கு பெண் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்குவதாகவும் உச்சநீதிமன்றம் அந்த வழக்கு விசாரணையின் போது கூறியிருந்தது.
இந் நிலையில் பள்ளிக் கூட வசதிகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் அடுத்த ஆறுமாதங்களுக்குள் அமல் படுத்தப் பட வேண்டும் என்று கே. எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான பென்ச் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கூடங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இருப்பது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள கட்டாய இலவசக் கல்வி என்ற ஷரத்துக்கு புறம்பானது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
thumbnail

விண்ணில் துகளால் ஆபத்து: நகர்த்தப்படும் விண் நிலையம்

விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் , விண் குப்பைத்துகள் ஒன்றுடன் மோதும் சாத்தியக்கூறைத் தவிர்ப்பதற்காக, வேறு ஒரு சுற்றுப்பாதைக்கு நகர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு விண்வெளி வீரர்கள் வசிக்கும் இந்த நிலையம், உந்தும் ராக்கெட்டுகளை ஏவி, அதன் மூலம், தனது சுற்றுப்பாதையை நோக்கி ஒரு மணிக்கு 28,000 கிலோ மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருக்கும் விண் குப்பைத்துகளின் பாதையிலிருந்து விலக முயலும்.
பூமியின் அருகாமையில் இருக்கும் விண் சுற்றுப்பாதையில் மட்டும் சுமார் 21,000 அபாயகரமான விண்குப்பைத் துகள்கள் இருப்பதாக கணிக்கப்படுகிறது.
இந்த சர்வதேச விண் நிலையத்தை இயக்குவதில் முக்கியமான ஒரு பகுதியே , இந்த மாதிரி விண் துகள்களின் மீது ஒரு"கண்" வைத்துக்கொண்டிருப்பதுதான்.

ஒரு வாரத்துக்கு முன்னர்தான், இந்த நிலையத்தின் ரஷ்யக்கட்டுப்பாட்டாளர்கள், இரண்டு துகள்கள் நெருங்கியதாகத் தோன்றியபோது, அதைத் தவிர்க்கும் நடவடிக்கை ஒன்றை எடுத்தனர்.
பின்னர் அதை ஆராய்ந்து பார்த்தபோது, அந்த நேரத்தில் அது போன்ற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதில்லை என்று தெரிந்தது.
இந்த புதிய அச்சுறுத்தல், கடந்த வாரம் நடந்ததை விட சற்று மேலும் அபாயகரமானது என்று நம்பப்படுகிறது.
இந்த விண் நிலையத்தைப் பொறுத்தவரை, கட்டுப்பாட்டாளர்கள் எந்த ஆபத்தான சாத்தியக்கூறையும் புறக்கணிப்பதில்லை. மோதல் நடப்பதற்கு பத்தாயிரத்தில் ஒரு சாத்தியக்கூறு இருந்தாலே அவர்கள் இந்த நிலையத்தை நகர்த்தி விடுகிறார்கள்.

இந்த ஆண்டு முன்னதாக , ஒரு செய்கோளின் துகள் சர்வதேச விண் நிலையத்தினை நெருங்கிவருவது , மிகத் தாமதாக கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்த நிலையத்திலிருந்த விண்வெளி வீரர்கள் ஒரு தப்பிக்கும் கேப்ஸ்யூலில் அடைக்கலம் புகுந்தனர். ஆனால் இந்த சமயத்தில் அந்த விண் துகள் இந்த நிலையத்தை 23 கிலோமீட்டர் தூரத்தில் மோதாமல் நழுவவிட்டது.
நாசா விண் வெளி ஆராய்ச்சி நிலையம், 10 செண்டிமீட்டருக்கும் பெரிய விண் துகள்களை கண்காணிக்கிறது. இது மாதிரி அளவுள்ள துகள்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவீதம் பெருகியிருப்பதாகக் கணிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் 2009ல் இரு செய்கோள்களுக்கிடையே நடந்த மோதல் என்று கூறப்படுகிறது.
2007ம் ஆண்டில் சீனா, தனது செய்கோள் ஒன்றை தாக்கி அழிக்க, ஒரு ஏவுகணையைப் பயன்படுத்தியதை அடுத்து, அந்த நடவடிக்கையே, 3,000க்கும் அதிகமான கண்காணிக்க வேண்டிய விண் பொருள் துகள்களை உருவாக்கியது.
ஆனால் தற்போது இந்த விண் வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் வசித்து வரும் ஆறு விண் வெளி வீரர்களுக்கு, இந்த மோதலைத் தவிர்க்க எடுக்கப்படும் நடவடிக்கை சற்று சுவாரஸ்யத்தைத் தரும். ஏனென்றால் அவர்கள் சமீபத்தில் உடைந்து போன கழிப்பறையைச் சரி செய்வது போன்ற வேலைகளில்தான் ஈடுபட்டு வந்தனர்.
thumbnail

சென்னையில் தறிகெட்டு ஓடிய பேருந்து - ஒருவர் பலி

சென்னையில் கலங்கரை விளக்கம் அருகே அரசு நகரப்பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதால் ஒருவர் பலியானார் சிலர் காயம் அடைந்தனர்.

சென்னை பெசன்ட் நகரில் இருந்து திருவொற்றியூர் சுங்க சாவடிக்கு, 6-ஏ வழித்தட அரசு பஸ் புறப்பட்டு வந்தது. மதியம் 12 மணி அளவில் அந்த பஸ் மெரீனா கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது. கலங்கரைவிளக்கம் எதிரே அகில இந்திய வானொலி நிலையம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல பஸ்சை டிரைவர் வேகமாக ஓட்டினார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது. எதிரே வந்த 3 மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளியபடி ஓடிய பஸ், ஒரு கட்டிடத்தில் மோதி நின்றது. பஸ் மாறுமாறாக வருவதை கண்ட அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டு கத்தினர். பஸ் நின்றதும் டிரைவரும், கண்டக்டரும் இறங்கி ஓடிவிட்டனர். பஸ் மோதிய மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காயத்துடன் ரோட்டில் விழுந்து கிடந்தனர். ஒருவர் மட்டும் பஸ்சுக்கு அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கி பிணமாக கிடந்தார். அவர் பெயர் விவரம் தெரியவில்லை.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த பெண் உள்பட 4 பேர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து, அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவர், கண்டக்டரை தேடி வருகின்றனர்.
thumbnail

காவிரி பிரச்சினை: சிதம்பரத்தில் பெங்களூர் ரெயிலை மறித்து போராட்டம்

தமிழக பொதுஉடைமை கட்சியின் இளைஞர் அமைப்பான தமிழக இளைஞர் முன்னணி சார்பில் சிதம்பரத்தில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

காவிரியில் தண்ணீர் திறந்து விடவேண்டும். தமிழகத்தில் காவிரி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

நாகூரிலிருந்து பெங்களூர் செல்லும் ரெயில் இன்று 7.42 மணிக்கு சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது தமிழக இளைஞர் முன்னணியினர் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள். இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் குபேரன் தலைமை தாங்கினார்.

ரெயில் மறியலையொட்டி சிதம்பரம் ரெயில் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 5 நிமிடம் அவர்கள் மறியல் செய்தனர். போலீசார் உடனே மறியலில் ஈடுபட்ட குபேரன், சுப்பிரமணிய சிவா, சுகன்ராஜ், மணிமாறன், கார்த்திகேயன், ராஜேந்திரன், கலைவாணன், விஜயராஜ், வினோத் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டதும் ரெயில் அங்கிருந்து புறப்பட்ட சென்றது.

Wednesday, October 03, 2012

thumbnail

கண்ணாமூச்சு காட்டும் காற்றாலை: ஏறி இறங்கும் மின்சார தடை

தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி முழுமையாக சீரடையாததால் தினமும் மின்வெட்டு உள்ளது. சென்னையில் 1 மணி நேரமும் பிற மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகமாகும் போது மின்வெட்டு குறைக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களாக காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு வந்ததால் சென்னையில் கடந்த 2 நாட்களாக மின் வெட்டு இல்லை. மற்ற மாவட்டங்களிலும் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது.

ஆனால் இன்று மீண்டும் காற்றாலை மின் உற்பத்தி குறைந்து விட்டது. காலையில் 1100 மெகாவாட் மின் உற்பத்தி தான் கிடைத்தது. இதனால் இன்று சென்னையில் மீண்டும் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றி மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி குறைந்ததால் கடந்த மாதம் மின்வெட்டு அதிகமாக இருந்தது. காற்றாலை மூலம் அதிகபட்சம் 1180 மெகாவாட் மின்சாரம்தான் கிடைத்தது. இதனால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காற்றாலை மின்உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்தது. பரவலாக மழை பெய்த காரணத்தாலும், காந்தி ஜெயந்தி விடுமுறையையொட்டி தொழிற் சாலைகளில் மின்சார பயன்பாடு குறைந்ததாலும் தாராளமாக மின்சாரம் கிடைத்தது. இதனால் 2 நாட்களாக மின்வெட்டு செய்யப்படவில்லை. இன்று காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் குறைந்து விட்டது. இதனால் பழையபடி மின் வெட்டு தொடருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாட்டை போக்க வெளி மாநிலங்களில் இருந்து 3500 மில்லியன் யூனிட் மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த மாதம் முதல் அடுத்த ஆண்டு (2013) மே மாதம் வரை யூனிட் மின்சாரம் ரூ. 4.13ல் இருந்து 5 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கலாம் என்று ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
thumbnail

ஆஸ்திரேலியா கல்வி நிறுவனங்கள் மூடல் இந்திய மாணவர்கள் பாதிப்பு

புதுடில்லி: ஆஸ்திரேலியாவில் மூன்று கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால் அதில் பயின்று வந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களி்ன் கல்வி ‌கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய ஹை கமிஷனர் பீட்டர் வர்கீஸ் கூறுகையில் இந்தியமாணவர்களின் கல்விக்கு பாதுகாப்பு அளி்க்கப்படும் என உறுதியளித்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் கல்வி தரத்‌தை மேம்படுத்தும் விதமா‌கவே விக்டோரியா மாகாணத்தில் இரண்டு கல்வி நிறுவனங்களும், நியூ சவூத் வேல்ஸ் பகுதியில் ஒரு கல்வி நிறுவனங்களும் மூடப்படும் எனவும் வரும் 30ம் தேதிக்கு பிற‌கே கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என ஆஸ்திரேலிய கல்வி தர கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேற்கண்ட கல்வி நிறுவனத்தில் பயின்று வந்த 500 இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
thumbnail

தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்

வணிகவரித்துறை, சட்டம், நீதித்துறை பொறுப்புகளை வகித்து வந்த அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவதாக அரசு செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
அதே நேரம் சட்டமன்ற அஇஅதிமுக கொறடா ப.மோகன் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஷண்முகம் விழுப்புரம் வடக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சி.வி.சண்முகம் வகித்து வந்த வந்த வணிகவரித்துறை, பதிவுத்துறை ஆகியவை அமைச்சர் பி.வி. ரமணா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சமூக நலத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் பா.வளர்மதிக்கு சத்துணவுத் திட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை, ஊரகத் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்த எம்.சி.சம்பத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் என்.ஆர்.சிவபதிக்கு கூடுதலாக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை, லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஊரக தொழில்துறை புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பி.மோகன் எதிர்வரும் அக்டோபர் 6ம் நாள் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொள்கிறார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் நடக்கும் எட்டாவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும். தமிழக சட்டப் பேரவை சபாநாயகராக இருந்த டி ஜெயகுமார் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக தற்போதைய துணை சபாநாயகர் தனபால் அப் பொறுப்புக்கு வரவுள்ளார். சபாநாயகர் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
thumbnail

அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாக விரும்புகிறான்-ஆனால் விவசாயி மகன் விவசாயி ஆக விரும்புவதில்லை: ஜனாதிபதி ஆதங்கம்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, இன்று ஒருநாள் சுற்றுப்பயணமாக பீகார் வந்தார். அவரை கவர்னர் தேவானந்த் கொன்வர் மற்றும் முதல் மந்திரி நிதிஷ் குமார் ஆகியோர் வரவேற்றனர்.
 
பின்னர் நடைபெற்ற விவசாய நிகழ்ச்சி ஒன்றில் குத்துவிளக்கேற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார். அப்போது பொருளாதார வளர்ச்சி குறித்து அவர் பேசியதாவது:-
 
ஒரு அரசியல்வாதியின் மகன் ஒரு அரசியல்வாதியாகவே வர விரும்புகிறான். ஆனால் ஒரு விவசாயி மகன் ஒரு விவசாயியாக வர விரும்புவதில்லை என்கிற செய்திகளை இப்பொழுதெல்லாம் நாம் கேட்க முடிகிறது.சமுதாய போக்கினை புரிந்துகொள்ளாமையே இதற்கு காரணமாகும்.
 
முதலாவது பசுமைப் புரட்சியை பார்க்கையில், அதிகப்படியான உரங்களை நாம் பயன்படுத்தியதால் நிலங்களின் மண்ணின் வளம் குறைந்து நிலத்தடி நீரும் கீழே போய்விட்டது. தாய் பூமியை கண்டுகொள்ளாமல் சுயநல நோக்கத்திற்காக பன்னாட்டு மக்கள் சமுதாயத்தினர் சுற்றுச்சூழலை மிக மோசமாக மாசுபடுத்தி விட்டனர்.
 
முதலீட்டாளர்களை பொறுத்தவரை இதுகுறித்து அக்கறை கொள்ளவேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை தடுத்து அதை புனிதமாக்க தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.
 
சுற்றுச்சூழல் மற்றும் முன்னேற்ற தேவைகளுக்கிடையே எந்த முரண்பாடுகளும் இங்கு இருக்கவில்லை.1981-1991க்கு இடைபட்ட காலங்களில் பீகாரின் பொருளாதார வளர்ச்சி வெறும் 4.9 சதவிகிதமே இருந்தது. ஆனால் இப்போது அது 11 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.இந்த விசயத்தில் பீகார் நம்முடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
ராஜேந்திர மண்டபம் திறப்பு விழா மற்றும் லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து  கொள்ளும் பிரணாப், நாளை மும்பையில் நடைபெறும் தொழிற்சாலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளார்

Tuesday, October 02, 2012

thumbnail

சென்னை: காந்தியடிகளின், 144வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மெரீனாவில் உள்ள அவரது சிலைக்கு, கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை: காந்தியடிகளின், 144வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மெரீனாவில் உள்ள அவரது சிலைக்கு, கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், மலர் தூவி மரியாதை செலுத்தினர். சர்வோதயா சங்கம் ஏற்பாடு செய்திருந்த, நூற்பு வேள்வி மற்றும் பஜனையிலும் அவர்கள் பங்கேற்றனர். அன்பு, சகோதரத்துவம், தீண்டாமை ஒழிப்பு, மத நல்லிணக்கம், தேச ஒருமைப்பாடு ஆகியவற்றை வலியுறுத்தி, காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணியை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார். கிண்டி காந்தி மண்டபம் வரை, பேரணி சென்றது. காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வந்த, முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் காத்திருந்தனர். அவர்களுடன், சபாநாயகர் பதவியை இழந்த ஜெயக்குமாரும் நின்று முதல்வரை வரவேற்றார். சவுகார்பேட்டையில் உள்ள கண்ணையால் அகர்வால் பால் நிகேதன் பள்ளி மாணவர்கள், 100 பேர், காந்தியடிகள் போல் வேடமணிந்து, காந்தியின் சிந்தனைகளை பரப்பும் கோஷங்களை எழுப்பினர்.
thumbnail

சபாநாயகர் வேட்பாளர் தனபால்: ஜெயலலிதா அறிவிப்பு- 10-ந்தேதி சட்டசபை கூடுகிறது

தமிழக சட்டசபை சபாநாயகராக இருந்த டி.ஜெயக்குமார் கடந்த 29-ந்தேதி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்தார்.
 
புதிய சபாநாயகர் தேர்ந்து எடுக்கப்படும் வரை துணை சபாநாயகர் ப.தனபால் தற்காலிகமாக சபாநாயகர் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
 
புதிய சபாநாயகர் தேர்தலை நடத்துவதற்காக தமிழக சட்டசபை வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) காலை கூடுகிறது. முன்னதாக 9-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
 
சபாநாயகர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக தற்போதைய துணை சபாநாயகர் ப.தனபால் நிறுத்தப்பட்டுள்ளார். இதுபற்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
10.10.2012 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளராக ப.தனபால் (ராசிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 
இதற்கிடையே 10-ந்தேதி சட்டசபை கூடுவதற்கான அறிவிப்பையும், சபாநாயகர் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பையும் கவர்னர் ரோசய்யா வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் கூறியிருப்பதாவது:-
 
தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசமைப்பு, பிரிவு 174(1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை ஏற்கனவே அறிவித்த 30.10.2012-ம் ஆம் நாளுக்கு பதிலாக 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
டி.ஜெயக்குமார் பேரவைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 7 (1)-ன் கீழ் 2012-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாள் (புதன்கிழமை) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று தமிழ்நாடு ஆளுநர் "நாள்'' குறித்துள்ளார்.
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 7(2)-ன்கீழ், 2012-ஆம் அண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் நாள் (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12.00 மணி வரையில் பேரவைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புத்தாள்கள் சட்டமன்றப் பேரவைச் செயலாளரால் பெற்றுக் கொள்ளப்பெறும்.
 
வேட்புத்தாள்களை செயலாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
சபாநாயகர் தேர்தலுக்கான மனுதாக்கல் வருகிற 9-ந்தேதி காலை தொடங்குகிறது. பகல் 12 மணி வரை மனுக்கள் பெறப்படும். ப.தனபால் அன்று மனுதாக்கல் செய்கிறார். முன்னதாக அவர் துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வார்.
 
தற்போது சட்டசபையில் அ.தி.மு.க. பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் ப.தனபால் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. 10-ந்தேதி நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் புதிய சபாநாயகர் பதவி ஏற்கிறார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். இதற்காக மூத்த உறுப்பினர் ஒருவர் தற்காலிகமாக சபாநாயகராக நியமிக்கப்படுகிறார். புதிய சபாநாயகர் பதவி ஏற்றதும் அவரை மூத்த உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவிப்பார்கள்.
 
புதிய சபாநாயகர் பதவி ஏற்றதும் அவர் துணை சபாநாயகர் தேர்தலை நடத்துவார்.
 
புதிய சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ள ப.தனபால் 1951-ம் ஆண்டு மே 16-ந்தேதி சேலம் கருப்பூரில் பிறந்தார். எம்.ஏ. பட்டம் பெற்றவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், லோகேஷ் தமிழ்செல்வன் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
 
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய பின்பு 1977-ம் ஆண்டு நடந்த முதலாவது பொதுத் தேர்தலில் சங்ககிரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1980, 1984, 2001-ம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
2001-ல் உணவு மற்றும் கூட்டுறவு துறை அமைச்சராக பணியாற்றினார். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். அவர் துணை சபாநாயகராக செயல்பட்டு வந்தார்.       

About