Friday, January 15, 2021

thumbnail

நாடெங்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

சரியான நேரத்தில் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்திருக்கிறது - பிரதமர் மோடி
கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி! நாடு முழுவதும் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
தமிழகத்தில் முதல் தடுப்பூசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் செந்திலுக்கு செலுத்தப்பட்டது. நெல்லையில் முதல் கொரோனா தடுப்பு ஊசி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு போடப்படுகிறது. நெல்லை பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைக்கிறார். பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவமனையிலும், ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்த தடுப்பூசி போடப்பட்டுகிறது. ஏற்கனவே பதிவு செய்திருந்த சுகாதார துறையை சார்ந்த முன்கள பணியாளர்கள் 100 முதல் 150 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் 15,100 தடுப்பூசிகள் வந்துள்ளது.
thumbnail

Pongal நல் வாழ்த்துகள்.

இல்லந்தோறும் இன்பம் பொங்கட்டும். தமிழர் தம் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும். எவ்விடத்திலும் எம் தமிழ் சிறக்கட்டும். இனிய தமிழ்த் திருநாள்
தைத் திங்கள் பொங்கல் நல் வாழ்த்துகள்.

Wednesday, August 05, 2020

thumbnail

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது .....



உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது  .....

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத் 
தொடங்குகிறது...

👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை,

 அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது.
 மீதி நாட்கள் விடுமுறை...

👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான்.

 அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம்

இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...

👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். 

படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...

👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது... 

பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...

👊தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், 

தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...

👌கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...

💪சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...

👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...

👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...

👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...

👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

👏கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், 

ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்...
 
‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது...

👍அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...

👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...

👊அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...

👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...

😳"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...

✅அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...

😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...

👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...

👍பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...

👍உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...

👍நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.

👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...

👌அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...

👍மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...

அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..

👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...

👌ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...

👌பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...

👌ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...

👌ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்...
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது... 

நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்... 

தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...

👍இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...

👏👏👏👏👏👏👏👏

பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்

Tuesday, July 28, 2020

thumbnail

+ 2 படித்த உடன் மத்திய சட்டப் பல்கலைக் கழகங்களில் பயில

CLAT – Common Law Admission Test – இந்தியா முழுமைக்குமான 22 மத்திய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு. 

https://consortiumofnlus.ac.in/clat-2020/

22  மத்திய அரசு சட்டப் பல்கலைக் கழகங்களில்  B Com LLB, BA LLB, BBA LLB என்று மூன்று பிரிவுகளில் ஐந்தாண்டுப் படிப்பு. அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரும் மாணவருடன் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு. பெங்களூரில் உள்ள NLSIU, ஹைதராபாத்தில் உள்ள NALSAR, கொல்கொத்தாவின் NUJS முதலானவை உலகத் தரம் வாய்ந்தவை.

1986ல் துவங்கப்பெற்ற NLSIUவின் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு பிரமிப்படைந்த சந்திர பாபு நாயுடு, தனது மாநிலத்திலும் அப்படி ஒன்று வேண்டும் என்று அன்றைய மத்திய அரசைக் கேட்டு பெற்றுக் கொண்டது தான் NALSAR. தற்போது தெலங்கானா உதயமானதால், விசாகப்பட்டினத்தில் இன்னொறைத் துவக்கியுள்ளார் (மத்திய அரசை நெருக்கி). தமிழ் நாட்டில் திருச்சியில் ஒன்று உள்ளது.

படித்து முடிக்கும் முன்னே வேலை, அல்லது பின்னர் மேற்படிப்புக்கான வாய்ப்புக்கள் என்று உலக சுற்றும் வேலைகள் ஏராளம். பாரதத்தில் தான் பணியாற்றுவேன் என்றாலும் மிகச் சிறந்த சட்ட நிறுவனங்களில் வேலை. கை நிறைய சம்பளம், அந்தஸ்து என்று நல்ல வாழ்க்கை.

வழக்காடுதலில் விருப்பமெனில் (Litigation) அதற்கும் நல்ல வாய்ப்புக்கள் உள்ளன. ஊடகத் துறையிலும் சட்டம் தொடர்பான கட்டுரைகள், பார்வைகள் என்று செயலாற்றவும் வாய்ப்புள்ளது. அரசுசாரா நிறுவனங்களில் சட்ட ஆலோசகர் வேலைகள், நீதிபதித் தேர்வில் வெற்றி பெற்றால் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகள் பதவி என்று வாய்ப்புக்கள் ஏராளம்.

இவை எல்லாவற்றையும் விட, IAS முதலான தேர்வுகளில் சட்டத்தைப் பாடமாகக் கொண்டு எழுதினால் வெற்றி பெறவும் வாய்ப்புக்கள் உள்ளன.

பாரதத்தின் பொருளியல் வலுவடைவதால் உலக நாடுகளின் நிறுவங்கள் பெருமளவில் முதலீடு செய்கின்றன. ஆகவே இவற்றிலும் சட்ட ஆலோசகர் முதலான வேலை வாய்ப்புக்கள் என்று எதிர்காலம் ஒளிப்பிரவாகம். இதற்காகவென்று குஜராத்தின் காந்திநகரில் உள்ள GNLUவில் சீன, ஜெர்மன் மொழிகளைக் கூடக் கற்றுத் தருகிறார்கள்.

CLAT மதிப்பெண்ணைக் கொண்டு, பல தனியார் சட்டப் பல்கலைக் கழகங்களும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். CLAT-PG என்று ஒன்று உள்ளது. இது சட்டத்தில் மேற்படிப்புக்கானது. இதில் வாங்கும் மதிப்பெண்ணைக் கொண்டு BHEL, ONGC, OIL முதலிய மத்திய அரச நிறுவனங்கள் தங்களுக்கான சட்ட ஆலோசகர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

 CLAT தேர்வை அனைத்து இந்தியத் தேர்வுகளுக்கான ஆணையம் நடத்தவிருக்கிறது. இணையத்தில் CLAT  https://consortiumofnlus.ac.in/clat-2020/ பாருங்கள். உங்களுக்கான புதிய வாழ்வின் கதவுகள் திறக்கும்.

Wednesday, June 01, 2016

thumbnail

எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் தமிழ் பேராய விருது-ரூ.22 லட்சம் மதிப்பில் srm tamil academy award

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக் கான பல திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறது. இணையவழி யிலான தமிழ்க் கல்வி, தமிழ்ச் சமயக் கல்வி, கணினித்தமிழ்க் கல்வி ஆகிய துறைகளின் மூலம் பட்டயப் படிப்புகளையும், சான்றிதழ் படிப்புகளையும் வழங்கி வருகிறது. அத்துடன் அரிய நூல்களை பதிப்பு செய்யும் பணியையும் செய்து வருகிறது. இவற்றோடு கடந்த 2012 முதல் தமிழ்ப்படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், தமிழறிஞர்கள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கி வருகிறது.




இளம் தமிழ் ஆய்வறிஞருக்கு வழங்கப்பட்டு வரும் வளர்தமிழ் விருது மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமைச் சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் அப்துல் கலாம் இளம் தமிழ் ஆய்வறிஞர் விருது என்ற பெயரில் வழங்கப்படும்.
சிறந்த நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்களை கவுரவிக்கும் வகையில், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 8 நூல்களையும் வெளியிட்ட பதிப்பகங்களுக்கும் விருதும், பாராட்டும் பகிர்ந்து அளிக்கப்படும். இந்த ஆண்டு ரூ.22 லட்சம் மதிப்பில் 12 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுகள் விவரம்:
1. புதுமைப்பித்தன் படைப் பிலக்கிய விருது (சிறுகதை, புதினம், நாடகம்)
2. பாரதியார் கவிதை விருது (கவிதை)
3. அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது (கதை, கவிதை, நாடகம்)
4. ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது (மொழி பெயர்ப்பு நூல்)
5. பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது (தமிழில் அறிவியல் நூல்)
6. ஆனந்த குமாரசாமி கவின் கலை விருது (சிற்பம், ஓவியம், தமிழிசை சார்ந்த நூல்)
7. விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது (கவிதை, சிறுகதை, புதினம், நாடகம்)
8. அப்துல் கலாம் இளம் தமிழ் ஆய்வறிஞர் விருது (ஆய்வு நூல்)
(மேற்கண்ட விருதுகள் ஒவ்வொன் றுக்கும் பரிசு தலா ஒன்றரை லட்சம் ரூபாய்)
9. சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது (தமிழ்க்கலை, இலக்கியப் பண்பாட்டு இதழ்) - ரூ.1 லட்சம்
10. தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதுகள் - ரூ.2 லட்சம்
11. பரிதிமாற்கலைஞர் விருது (சிறந்த தமிழறிஞர்) - ரூ.2 லட்சம்
12. பாரிவேந்தர் பைந்தமிழ் விருது (தமிழ்ப் பேரறிஞர் வாழ்நாள் சாதனையாளர் விருது) - ரூ.5 லட்சம்
பரிந்துரைகளும், நூல்களும் ஜுன் மாதம் 30-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். முகவரி: துறைத் தலைவர், தமிழ்ப் பேராயம், மைய நூலகக் கட்டிடம், 4-வது தளம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், காட்டாங்கு ளத்தூர் 603 203. காஞ்சிபுரம் மாவட்டம். தொலைபேசி எண் 044-27417375.

Wednesday, February 17, 2016

thumbnail

Putham puthu kalai


புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. என் வாழ்விலே.. தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும்.. எந்நாளும் ஆனந்தம்.. புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ? இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ? மனதின் ஆசைகள்.. மலரின் கோலங்கள்.. குயிலோசையின் பரிபாஷைகள்.. அதிகாலையின் வரவேற்புகள்.. புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ? பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ? வயதில் தோன்றிடும்.. நினைவில் ஆனந்தம்.. வளர்ந்தோடுது இசைபாடுது.. வலி கூடிடும் சுவைகூடுது... புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. என் வாழ்விலே.. தினந்தோறும் தோன்றும்.. சுகராகம் கேட்கும்.. எந்நாளும் ஆனந்தம்.. லல்லலாலா..லா..லாலா..ஆ..

Monday, March 03, 2014

thumbnail

தமிழகம் மற்றும் புதுசேரியில் பிளஸ்–2 தேர்வு இன்று தொடங்கி மார்ச் 25–ந்தேதி வரை நடக்கிறது


தமிழகம் மற்றும் புதுசேரியில் பிளஸ்–2 தேர்வு இன்று தொடங்கி மார்ச் 25–ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 6ஆயிரத்து 4 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 மாணவமாணவிகள் எழுதுகிறார்கள்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 26 ஆயிரத்து 604 மாணவமாணவிகள் கூடுதலாக எழுதுகிறார்கள். 3 லட்சத்து 80 ஆயிரத்து 288 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 45 ஆயிரத்து 829 பேர் மாணவிகள். மாணவர்களை விட 65 ஆயிரத்து 541 மாணவிகள் கூடுதல் எண்ணிக்கையில் தேர்வு எழுதுகிறார்கள்.

Wednesday, February 19, 2014

thumbnail

Brihadeeswarar Temple-Peruvudaiyar Kovil

Brihadeeswarar Temple
The Peruvudaiyar Kovil, also known as Brihadeeswara Temple, RajaRajeswara Temple and Rajarajeswaram, at Thanjavur in the Indian state of Tamil Nadu, is a Hindu temple dedicated to Shiva and an art of the work achieved by Cholas in Tamil architecture. The temple is part of UNESCO World Heritage Site and "Great Living Chola Temples".

This is one of the largest temple in India and one of India's most prized architectural sites. The temple stands amidst fortified walls that were probably added in the 16th century. The vimana (or temple tower) is 216 ft (66 m) high  and is among the tallest of its kind in the world. The Kumbam (Kalasha or Chikharam) (apex or the bulbous structure on the top) of the temple is carved out of a single stone and it weighs around 80 tons.

There is a big statue of Nandi (sacred bull), carved out of a single rock, at the entrance measuring about 16 feet long and 13 feet high. The entire temple structure is made out of granite, the nearest sources of which are close to Tiruchirappalli, about 60 km to the west of Thanjavur. Built in 1010 AD by Raja Raja Chola I in Thanjavur, Peruvudaiyaar Temple, also popularly known as the ‘Big Temple', turned 1000 years old in 2010.





Wednesday, October 23, 2013

thumbnail

புது யுகம்... புதிய தொலைக்காட்சி தொடக்கம்

புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமத்திலிருந்துபுதுயுகம்' எனும் பொழுதுப்போக்கு டிவி சேனல் 23.10.13

முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. ‘நியூ ஜெனரேஷன் மீடியா' நிறுவன தலைவர் சத்திய நாராயணன் இதனை தொடக்கி வைத்தார்.குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரும் ஒருசேர அமர்ந்து பார்த்து ரசிக்கும் வண்ணம் நெடுந்தொடர்கள் மற்றும் குறுந்தொடர்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவாம். இந்த தொடர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டு புனையப்பட்டுள்ளன.
பொழுதுகள் போக்குவதற்கு இல்லை அனுபவிக்கவேண்டியவை என்பதை உணர்த்தும் வகையில் காலை முதல் இரவு வரை நேயர்களை ஒருமுகப்படுத்தும் வகையில் புதுயுகம் தொலைக்காட்சியில், நிகழ்ச்சிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.புதிய கோணத்தில்இந்த டிவியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொடர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், விவாதங்கள் என்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் புதிய கோணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளனவாம்.
அழ வைக்காத சீரியல்கள்வீட்டுப் பெண்களை அழவைத்து அழகு பார்க்கவைப்பதிலும் முறையற்ற உறவுகளைக்காட்டி பார்வையாளர்களை வசீகரிக்கும் நோக்கமுமின்றி, நிகழ்ச்சிகளிலும் தொடர்களிலும் கேளிக்கை , பொழுதுபோக்கு , கொண்டாட்டம் அதே சமயத்தில் வாழ்க்கை மதிப்பீடுகளை தூக்கிப்பிடிக்கும் செய்திகளும் கொண்டதாய் புதுயுகம் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.சன் நியூஸ் சேனலுக்கு போட்டியாக புதிய தலைமுறை ஒளிபரப்பாவதைப் போர சன்டிவி சேனலுக்கு கடுமையான போட்டியை புதுயுகம் சேனல் உருவாக்கும் என்கின்றனர் ஊடக உலகத்தினர்

Monday, October 14, 2013

thumbnail

புயல்களும் பெயர்களும்

புயல் சின்னம் உருவாகும் போதெல்லாம், அதற்கு ஒரு பெயர் சூட்டப்படுவது பற்றி அறிந்திருப்போம். அவற்றிற்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது ?

ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று புயல்கள் உருவானால் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் மனிதர்களைப் போலவே புயலுக்கு பெயர் வைக்கும் முறை உருவானது.
அரசியல்வாதிகளின் பெயர்
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆஸ்திரேலியா தான் இந்தப் பழக்கத்தை முதலில் தொடங்கி வைத்தது.
ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர் மக்களிடம் செல்வாக்கு குறைந்த அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். பின்னர் 1954 ஆம் ஆண்டு இந்தப் பழக்கத்தை அமெரிக்கா தொடங்கியது.
இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004 ஆம் ஆண்டில் உருவானது.
இந்தியா,வங்கதேசம், மாலத்தீவு,‌ மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்த், இலங்கை ஆகிய 8 நாடுகள் இணைந்து பெயர் பட்டியலைத் தயாரித்துள்ளன.
இந்த நாடுகள் கொடுத்துள்ள 64 பெயர்களில் 22 பெயர்கள் இதுவரை உருவான புயல்களுக்கு சூட்டப்பட்டுள்ளன.
நாம் கடந்து வந்த புயல்களில் லைலா என்ற பெயர் பாகிஸ்தான் கொடுத்தது.
இந்தியா வைத்த பெயர்
ஜல் என்ற பெயர் இந்தியா கொடுத்திருந்த பெயர். சமீபத்தில் நம்மை பரபரப்புக்கு உள்ளாக்கிய தானே என்ற பெயரை மியான்மரும், மகாசேன் என்ற பெயர் இலங்கையாலும் கொடுக்கப்பட்டதாகும்.
தற்போது அந்தமான் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.
இதையடுத்து, பட்டியலில் தாய்லாந்து கொடுத்துள்ள பைலின் என்ற பெயர், இந்த புயலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

நாடுகள்
1
2
3
4
5
6
7
8
வங்கதேசம்
Onil
Ogni
Nisha
Giri
Helen
Chapala
Ockhi
Fani
இந்தியா
Agni
Akash
Bijli
Jal
Lehar
Megh
Sagar
Vayu
மாலத்தீவுகள்
Hibaru
Gonu
Aila
Keila
Madi
Roanu
Makunu
Hikaa
மியான்மர்
Pyarr
Yemyin
Phyan
Thane
Na−nauk
Kyant
Daye
Kyarr
ஓமன்
Baaz
Sidr
Ward
Murjan
Hudhud
Nada
Luban
Maha
பாகிஸ்தான்
Fanoos
Nargis
Laila
Nilam
Nilofar
Vardah
Titli
Bulbul
இலங்கை
Mala
Rashmi
Bandu
Mahasen
Priya
Asiri
Gigum
Soba
தாய்லாந்து
Mukda
Khai−Muk
Phet
Phailin
Komen
Mora
Phethai
Amphan

About