Saturday, October 06, 2012

thumbnail

இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கவுள்ள பைனலில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன

இலங்கையுடன் மோதல்:இன்று  கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கவுள்ள பைனலில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.33 ஆண்டுகளுக்கு பின்… நேற்றைய அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக கோப்பை தொடர்களில் (50, 20 ஓவர் சேர்த்து) 33 ஆண்டுகளுக்கு பின் பைனலுக்கு முன்னேறியது. கடைசியாக 1979ல் நடந்த 50 ஓவர் உலக கோப்பை தொடரில் பைனலுக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 1996 (50 ஓவர்), 2009ல் (டுவென்டி-20) நடந்த உலக கோப்பை தொடர்களில் அரையிறுதி வரை சென்றது.
* “டுவென்டி-20 உலக கோப்பை வரலாற்றில் பைனலுக்கு முன்னேறுவது இதுவே முதன்முறை. முன்னதாக 2009ல் அரையிறுதி வரை முன்னேறியது.
* ஐ.சி.சி., சார்பில் நடத்தபடும் தொடர்களில் 2006ம் ஆண்டுக்கு பின், முதன்முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது. கடந்த 2006ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து இரண்டாவது இடம் பிடித்தது.
பழிதீர்த்தது
லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் “பி பிரிவில் இடம் பெற்றிருந்தன. இவ்விரு அணிகள் மோதிய லீக் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட, “டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இத்தோல்விக்கு நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி பழிதீர்த்தது.
200வது சிக்சர்
ஆஸ்திரேலியாவின் தோகர்டி வீசிய 6வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல். இது, இத்தொடரின் 200வது சிக்சராக அமைந்தது. முதல் சிக்சரை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கையின் ஜீவன் மெண்டிஸ் அடித்தார். 100வது சிக்சர் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கையின் தில்ஷன் அடித்தார்.
இதுவே அதிகம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 205 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இத்தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கொழும்புவில் நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About