Saturday, October 06, 2012

thumbnail

ஹவாய்-லானைத் தீவை சுற்றுச்சூழல் நிறைந்த சொர்க்க பூமியாக மாற்ற ஆரக்கிள் அதிபர் திட்டம்

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ஆரக்கிள் கம்பெனியின் அதிபர் லார்ரி எல்லீசன். இவர் கடந்த ஜுன் மாதம் கோடீஸ்வரர் டேவிட் முர்டோக்கிடமிருந்து 365 சதுரகிலோமீட்டர் உள்ள இந்த லானை தீவின் 98 சதவிகித பகுதியை விலைக்கு வாங்கினார். இத்தீவில் இரண்டு பொழுதுபோக்கு அரண்மனைகளும், கோல்ப் விளையாட்டு மைதானங்களும், பலதரப்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளும் அங்கு உள்ளன. மேலும் அண்ணாசி பழமரத் தோப்புகளும் உள்ளன. 
 
இந்த தீவு குறித்து அவர் கூறியதாவது:-
 
எனது கனவு நிறைவேறுமானால், ஹவாய் தீவுகளில் ஒன்றான, இந்த லானைத் தீவை சுற்றுப்புற சூழல் நிறைந்த ஒரு சொர்க்க பூமியாக மாற்றுவேன். நான் நேசிக்கும் இந்த லானைத் தீவை ஒரு புதியத் திட்டத்திற்கு உரிய ஒரு மாதிரி நகரமாக மாற்றப் போகிறேன். தீவை சுற்றியுள்ள கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றுவேன். தீவு முழுமையும் சொட்டு நீர் பாசனத்துடன் கூடிய இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகளை உருவாக்கும் ஆர்கானிக் பண்ணைகளை நிறுவுவேன். அவ்வாறு விளைந்த உணவுப் பொருட்களை ஜப்பான் மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வேன். இந்த தொழில் செய்ய இத்தீவு மக்களுக்கு உதவுவேன். பேட்டரியில் ஓடும் கார்களை இங்கு பயன்படுத்துவோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About