Friday, October 05, 2012

thumbnail

டி-20 உலக கோப்பை இறு‌தி‌யி‌ல் இல‌ங்கை - பாகிஸ்தான் வெ‌ளியே‌றியது!

20 ஓவரஉலக கோப்பை கிரிக்கெட்டில் போ‌ட்டி‌ன் அரை‌யிறு‌தி ஆ‌ட்ட‌த்த‌ி‌ல் பாகிஸ்தா‌ன் அ‌ணியை 16 ர‌ன்‌னி‌ல் இலங்கை அணி ‌வீ‌ழ்‌த்‌‌தி இறுதிப்போட்டி‌க்கு செ‌ன்றது.

கொழும்பில் நே‌ற்‌றிரவு நடந்த முதலாவது அரை‌யிறுதியில் இலங்கையும், பாகிஸ்தானும் மோதின. டாஸ் வெ‌ன்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செ‌ய்தது. கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனேவும், தில்சானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி நீண்ட நேரம் நின்று ஆடினாலும், ரன் குவிக்க முடியாமல் திணறியது.

குறிப்பாக தில்சான் வழக்கத்திற்கு மாறாக பந்துகளை அதிகமாக ‌ிரயம் செய்தார். கேப்டன் ஜெயவர்த்தனே 36 ப‌ந்‌தி‌ல் 42 ரன்னு‌ம், தி‌ல்சான் 35 ரன்னு‌ம் எடு‌த்து ஆட்டம் இழந்தனர். கைவசம் விக்கெட்டுகள் இருந்தும், இறுதிவரை ஆட்டம் சூடுபிடிக்காமல் மந்தமாகவே நகர்ந்ததால், உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றத்திற்குள்ளானார்கள்.

கடைசி ஓவரில் மட்டும் ஆறுதல் அளிக்கும் வகையில் 3 பவுண்டரி உள்பட 16 ரன்களை இலங்கை ஜோடி திரட்டியது. ஆனால் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது. இலங்கை பேட்ஸ்மேன்கள் தங்களது இன்னிங்சில் மொத்தம் 54 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் வீணாக்கியது குறிப்பிடத்தக்கது.

பி‌ன்ன‌ர் ‌விளையாடிய பாகிஸ்தானுக்கு, இலங்கை பவுலர்கள் பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் தொடக்க ஜோடி ஓரளவு நல்ல தொடக்கம் தந்த போதிலும் அதனை மிடில்வரிசை பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக்கொள்ள தவறினர். பந்து வீச்சாளர்களின் சொர்க்கமாக திகழ்ந்த இந்த ஆடுகளத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க முடியாமல் தொடர்ந்து தவித்தனர்.

ஹெராத், அஜந்தா மென்டிசின் சுழலில் சிக்கிய அவர்களால் அதில் இருந்து கடைசி வரை மீளவே முடியவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய பாகிஸ்தான் அணியால் 7 விக்கெட்டுக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் முகமது ஹபீஸ் 42 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஏற்கனவே 2009-ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதிவரை வந்து பாகிஸ்தானிடம் கோப்பையை கோட்டை விட்டிருந்தது. இந்த தோல்விக்கு இப்போது இலங்கை அணி வஞ்சம் தீர்த்துக் கொண்டது.

இதற்கு முன்பு இந்த மைதானத்தில் 4 முறை 20 ஓவர் கிரிக்கெட்டில் தோற்றிருந்த இலங்கை அணி முதல் முறையாக இங்கு வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இலங்கை அணி வரு‌ம் 7ஆ‌ம் தே‌தி நடக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்‌ட்ரேலியா அ‌ல்லது மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அணியை சந்திக்கும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About