Friday, October 05, 2012

thumbnail

புரட்டாசி மாதம் என்பதால் நாமக்கல்லில் 12 கோடி முட்டைகள் தேக்கம்


சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் சுமார் 300 கோழிப்பண்ணைகள் உள்ளது. இதன் மூலம் தினமும் சராசரியாக சுமார் 3 கோடியே 25 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும் தினசரி 50 லட்சம் முதல் 70 லட்சம் வரை ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, ஓமன், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவில் கடந்த மாதம் உயர்ந்தது.

இந்நிலையில் தற்போது புரட்டாசி மாதம் என்பதாலும், பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும் சத்துணவுக்கு அனுப்பபடும் முட்டையிலும் பாதிப்பு ஏற்பட்டதாலும் தமிழகம் முழுவதும் முட்டை விற்பனையில் சரிவு ஏற்பட்டது. இதன் அடிப்படையில் முட்டை கொள்முதல் விலை கடந்த மாதம் 24-ந் தேதி 1- காசுகள் குறைத்து ரூ. 3.55 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 

நேற்று மேலும் 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.3.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. முட்டைக் கொள்முதல் விலை மேலும் குறையக்கூடும் என்று நாமக்கல் மண்டல என்.இ.சி.சி. தலைவர் செல்வராஜ் கூறினார். அவர் மேலும் கூறும் போது,

புரட்டாசி மாதம் காரணமாக நாமக்கல் மண்டல முட்டை விற்பனையில் 15 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 6 கோடி முட்டைகள் வரை தேங்கியிருக்கும். ஆனால் இப்போது 12 கோடி முட்டைகள் வரை தேக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் டெல்லி, ஐதராபாத், மண்டலத்திலும் முட்டை விலை குறைந்துள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About