Thursday, October 04, 2012

thumbnail

காவிரி: மத்தியக் குழு தமிழகம் வந்தது

கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டிற்குமிடையே காவிரி நீர்ப் பிரச்சனை தொடர்பாக பதட்டமானதொரு சூழல் உருவாகியிருக்கும் நிலையில் இரு மாநிலங்களிலும் அணைகளின் நீர் நிலவரம், பயிர் நிலை, தமிழகத்திற்கு நீர்வரத்து உள்ளிட்டவற்றை ஆராயவென மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான குழு இன்று வியாழன் தமிழகம் வந்தது.
முதற்கட்டமாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் துருவ் விஜய் சிங் தலைமயிலான அக்குழு அரசு தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியையும் மற்றும் மூத்த அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தியது.
நிபுணர் குழு இன்னமும் நான்கு நாட்களில் தனது அறிக்கையினை காவிரி கண்காணிப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே காவிரியில் இருந்து தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
கர்நாடக மாநிலத்திலோ காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்தும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், எதிர்வரும் அக்டோபர் 6ஆம் நாள் முழுக்கடையடைப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பெங்களூர் தமிழ் சங்கமும் கடையடைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About