Saturday, October 06, 2012

thumbnail

செம்மண் கொள்ளை குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது

            செஞ்சி: விழுப்புரம் மாவட்டத்தில் தனக்கென தனி செல்வாக்கு கொண்ட தி.மு.க.,மாஜி அமைச்சர் பொன்முடி செம்மண் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். முன்னதாக செஞ்சியில் நடந்த போராட்டத்தில் கைது செய்ய முற்பட்டபோது கட்சி தொண்டர்கள் மறியல் செய்து போலீசார் கைது செய்ய விடாமல் தடுத்தனர். அங்கிருந்து விழுப்புரம் புறப்பட்ட பொன்முடி பல கார்களில் மாறி, மாறி ஏறி தி.மு.க, நகர அலுவலகத்திற்கு வந்தார். இங்கு சுற்றிவளைத்த போலீசார் பொன்முடியை கைது செய்து அழைத்து சென்றனர்.
                
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாசில்தார் கொடுத்த தகவலின் அடிப்படையில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் சட்டத்தின் கீழும் ஊழல் ஒழிப்பு சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ் பொன்முடி எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பட்டா நிலங்களில் இருந்து செம்மண் அள்ளியதில் நடந்த முறைகேடுகள் செய்ததாக பொன்முடி மீது குற்றம்சாட்டப்படுகிறது.

முந்திய திமுக அரசில் உயர்கல்வி, சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் போன்ற துறைகளுக்கு அமைச்சராக இருந்த பொன்முடி கட்சியின் முன்னணித் தலைவரும் ஆவார்.


Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About