Wednesday, October 03, 2012

thumbnail

அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாக விரும்புகிறான்-ஆனால் விவசாயி மகன் விவசாயி ஆக விரும்புவதில்லை: ஜனாதிபதி ஆதங்கம்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, இன்று ஒருநாள் சுற்றுப்பயணமாக பீகார் வந்தார். அவரை கவர்னர் தேவானந்த் கொன்வர் மற்றும் முதல் மந்திரி நிதிஷ் குமார் ஆகியோர் வரவேற்றனர்.
 
பின்னர் நடைபெற்ற விவசாய நிகழ்ச்சி ஒன்றில் குத்துவிளக்கேற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார். அப்போது பொருளாதார வளர்ச்சி குறித்து அவர் பேசியதாவது:-
 
ஒரு அரசியல்வாதியின் மகன் ஒரு அரசியல்வாதியாகவே வர விரும்புகிறான். ஆனால் ஒரு விவசாயி மகன் ஒரு விவசாயியாக வர விரும்புவதில்லை என்கிற செய்திகளை இப்பொழுதெல்லாம் நாம் கேட்க முடிகிறது.சமுதாய போக்கினை புரிந்துகொள்ளாமையே இதற்கு காரணமாகும்.
 
முதலாவது பசுமைப் புரட்சியை பார்க்கையில், அதிகப்படியான உரங்களை நாம் பயன்படுத்தியதால் நிலங்களின் மண்ணின் வளம் குறைந்து நிலத்தடி நீரும் கீழே போய்விட்டது. தாய் பூமியை கண்டுகொள்ளாமல் சுயநல நோக்கத்திற்காக பன்னாட்டு மக்கள் சமுதாயத்தினர் சுற்றுச்சூழலை மிக மோசமாக மாசுபடுத்தி விட்டனர்.
 
முதலீட்டாளர்களை பொறுத்தவரை இதுகுறித்து அக்கறை கொள்ளவேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை தடுத்து அதை புனிதமாக்க தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.
 
சுற்றுச்சூழல் மற்றும் முன்னேற்ற தேவைகளுக்கிடையே எந்த முரண்பாடுகளும் இங்கு இருக்கவில்லை.1981-1991க்கு இடைபட்ட காலங்களில் பீகாரின் பொருளாதார வளர்ச்சி வெறும் 4.9 சதவிகிதமே இருந்தது. ஆனால் இப்போது அது 11 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.இந்த விசயத்தில் பீகார் நம்முடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
ராஜேந்திர மண்டபம் திறப்பு விழா மற்றும் லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து  கொள்ளும் பிரணாப், நாளை மும்பையில் நடைபெறும் தொழிற்சாலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளார்

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About