Friday, October 05, 2012

thumbnail

பணம் பூமிக்கடியில் வளர்கிறது: மன்மோகன் சிங்குக்கு பாபா ராம்தேவ் பதிலடி

பணம் மரத்தில் காய்க்கவில்லை எனக் கூறிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பதிலடியாக, பணம் பூமிக்கடியில் வளர்கிறது என யோகாகுரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய ராம்தேவ், ‘பணம் பூமிக்கடியில் நிலக்கரி வடிவத்தில் வளர்கிறது என்பது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரியும். அதனால்தான் பணம் மரத்தில் காய்க்கவில்லை என அவர் கூறினார்’ என்றார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் எனவும் ராம்தேவ் கேட்டுக்கொண்டார். மேலும், ‘நிலக்கரி ஊழல்தான் உலகில் இதுவரை நடந்த ஊழல்களில் மிகப்பெரிய ஊழல். 400 லட்சம் கோடி ரூபாய் இதில் கையாடப்பட்டிருக்கிறது’ எனவும் ராம்தேவ் கூறினார்.
அப்போது, கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்ற தனது வழக்கமான கோரிக்கையையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ராம்தேவ், ‘எனக்கு யாருடனும் நட்போ, பகையோ கிடையாது. ஆனால் ஊழலில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்’ என்றார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About