Sunday, October 14, 2012

thumbnail

வெனிசுலா அதிபர் தேர்தலில் சாவேஸ்-இலத்தீன் அமெரிக்காவின் தன்னிகரற்ற தலைவராக வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார்.

வெனிசுலா அதிபர் தேர்தலில் சாவேஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இலத்தீன் அமெரிக்காவின் தன்னிகரற்ற தலைவராக வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார். அவர் 54 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் கவுன்சில் தலைவர் லூசெனா அறிவித்தார்.இவ்வெற்றியின் மூலம் அடுத்த 6 வருடங்களுக்கு சாவேஸ் வெனிசுலாவின் அதிபராக செயல்படுவார். வெனிசுலா நாட்டின் அதிபரான ஹுகோ சாவேஸ் கடந்த 14 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக உள்ளார். அமெரிக்காவின் பரம வைரியான அவரை தோற்கடிக்க வெனிசுலாவின் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து ஹென்ரிக் கேப்ரில்ஸை வேட்பாளராக நிறுத்தினார். முடிவில் (54%) 74 லட்சத்துக்கு 44 ஆயிரத்து 82 வாக்குகள் பெற்று, சாவேஸ் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கேப்ரிலஸிஸ் 61 லட்சத்துக்கு 51 ஆயிரத்து, 544 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். கச்சா எண்ணெய் உறபத்தியின் மூலம் வரும் வருமானத்தை ஏழைகளின் வளர்ச்சிக்கு உதவி செய்வதால், இவரை பெரும்பான்மையான முதலாளித்துவவாதிகளுக்கு அறவே பிடிக்காது. மேலும் இவரை எப்படியேனும் புதிய இளம் தலைமுறைத் தலைவர்களை வைத்து கவிழ்த்துவிடலாம் என்ற திட்டமும் தவிடு பொடியாகிவிட்டது. புற்று நோய் எப்படியும் காவு கொண்டுவிடும் என்று இருமாந்த முதலாளித்துவவாதிகளுக்கு அதில் இருந்து சாவேஸ் பிழைத்து வந்ததே பெரும் ஏமாற்றமாக இருந்தது. இப்பொழுதைய இந்த வெற்றி முதலாளித்துவவாதிகளை அடக்கி வாசிக்க வைக்கும். ஆனால் பொதுமக்களுக்கோ மிகவும் உற்சாகம். சாவேஸின் வெற்றியை பொதுமக்கள் கூக்குரலிட்டு ஆரவாரம் செய்தனர். “சாவேஸே எங்களது சந்தோசம். அவர் தொடர்ந்து ஏழைகளையும், சக்தியற்றவர்களையும் பாதுகாப்பார்” என்றார் 54 வயதான கிளாடிஸ் மோண்டிஜோ. “உங்களது வெற்றி, எங்களது வெற்றி,” என்றார் அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ட்விட்டரின் மூலமாக. சாவேஸின் வெற்றியினைத் தொடர்ந்து முதலாளித்துவ நாடுகள் தள்ளி நின்றாலும் அவரது நேச நாடுகளான சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் பெலாரஸ் போன்ற நாடுகள் தங்களது பொருளாதரத்தை வெனிசுலாவில் தொடர்ந்து முதலீடு செய்துவருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About