Showing posts with label bjp. Show all posts

Wednesday, September 25, 2013

thumbnail

பிஜேபி இளம் தாமரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நரேந்திர மோடி நாளை தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார்

திருச்சி:பிஜேபி இளம் தாமரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நரேந்திர மோடி நாளை தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். தீவிரவாத அமைப்புகள் மிரட்டலை தொடர்ந்து திருச்சியில் போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
.
திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் இளம் தாமரை மாநாடு நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், குஜராத் மாநில முதல் மந்திரியும், பிஜேபி  கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நரேந்திர மோடி நாளை மாலை 3 மணி அளவில் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க. தொண்டர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.

வரவேற்பு முடிந்த பின்னர் ஜெயில் கார்னர், ரெயில்வே குடியிருப்பு வழியாக மோடி மாநாட்டு மேடைக்கு அழைத்து வரப்படுகிறார்.அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் மோடி பேசுகிறார். மாநாட்டில் மோடி பேசி முடித்த பின்னர் இரவு 7 மணி அளவில் அதே தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி ஆகியோர் பேசுவதற்காக பொன்மலை ஜி. கார்னர் மைதானத்தில் 130 அடி நீளம், 50 அடி அகலத்தில்
திறந்த வெளி மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேடையின் பின்புறம் டெல்லி செங்கோட்டை போன்று வடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளது.

இது தவிர மாநாட்டின் நுழைவு வாயில் பகுதியில் இந்தியா கேட் போன்ற அலங்கார வளைவு அமைக்கப்பட்டு உள்ளது.மாநாட்டு மைதானத்தில் சுமார் 75 ஆயிரம் பேர் அமருவதற்காக நாற்காலிகள் போடப்பட உள்ளன. மேலும் மாநாடு நடைபெற உள்ள ஜி கார்னர் மைதானம், திருச்சி விமான நிலையத்தில் இருந்து மாநாட்டு திடல், புதுக்கோட்டை மெயின்ரோடு, டி.வி.எஸ். டோல்கேட் ஆகிய இடங்களில் மோடியை வரவேற்று பிரமாண்ட கட் அவுட்கள், பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டு உள்ளன. பாரதீய ஜனதா கட்சியின் கொடி, தோரணங்களும் அமைக்கப்பட்டு திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.

இந்த மாநாட்டின் முக்கிய பிரமுகரான நரேந்திர மோடி தீவிரவாதிகளின் கொலைப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதால், மோடி திருச்சி வருகையின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுக்க போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.10 அமைப்புகள் மோடிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து மாநாட்டு மேடை, திருச்சி விமான நிலையம், மோடி மாநாட்டுக்கு வரும் பாதை ஆகிய இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது

Wednesday, August 29, 2012

thumbnail

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பய‌ங்கரவா‌தி கசாபு‌க்கு ‌‌பி‌ரியா‌ணி கொடு‌த்தது போது‌ம், உடனடியாக அவனை தூ‌க்‌கி‌ல் போடு‌ங்க‌‌ள் எ‌ன்று பா.ஜ.க வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பய‌ங்கரவா‌தி கசாபு‌க்கு ‌‌பி‌ரியா‌ணி கொடு‌த்தது போது‌ம், உடனடியாக அவனை தூ‌க்‌கி‌ல் போடு‌ங்க‌‌ள் எ‌ன்று பா.ஜ.க வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

மும்பை தாக்கு‌லி‌ல் ஈடுப‌ட்ட பய‌ங்கரவா‌தி ஜ்மல் கசாப்புக்கு ‌கீ‌ழ்‌நீ‌திம‌ன்ற‌ம் மரண தண்டனை விதித்‌தது. இந்த தீர்ப்பை மும்பை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உறு‌தி செ‌ய்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கசா‌ப்‌பி‌ன் மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ம் இ‌ன்று த‌ள்ளுபடி செ‌ய்ததோடு, கசா‌ப் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திரான போ‌ர் தொடு‌த்தை ஏ‌ற்று‌க் கொ‌ள்ள முடியாது எ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

இது தொடர்பாக பேசிய பா.ஜ.க மூ‌த்த‌த் தலைவ‌ர் முக்தர் அப்பாஸ் நக்வி, கசாபின் மனு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீ‌ர்ப்பை வரவேற்பதாக கூ‌றினா‌ர்.

மேலும் அவனுக்கு பிரியாணி கொடுத்தது எல்லாம் போதும், தண்டனையை உடனடியாக நிறைவேற்றி அவனை தூக்கி‌லிட வேண்டும் எ‌ன்றா‌ர்.

Sunday, July 08, 2012

thumbnail

Indiya Jananayaka Katchi (IJK) leader Paari Vendhar said that, TN state government is planning to increase the sales of liquor items in the state/ மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் இந்திய ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைக்கும்: பாரிவேந்தர்

மதுரை: மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் இந்திய ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைக்கும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது குறித்து கூறியதாவது:
இந்திய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகின்றன. கட்சி தொடங்கி 8 மாதத்தில் 2011-ல் பொதுத்தேர்தலை எதிர்கொண்டு, 131 தொகுதிகளில் போட்டியிட்டோம். படித்த இளைஞர்களுக்கு நாங்கள் அரசியல் தளத்தை ஏற்படுத்திக்கொடுத்து, அதற்குள் அவர்களை கொண்டு வர விரும்புகிறோம்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மக்களின் நிரந்தர தேவையான மின்சாரத்தை தொடர்ந்து கொடுக்க நடவடிக்கை இல்லை. அ.தி.மு.க. ஆட்சி முடியும் வரை மின்சாரத்தை தொடர்ந்து முழுமையாக கொடுக்க முடியாது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்க உள்ளோம். அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம். அந்தக் கட்சிக்குத்தான் குடும்ப அரசியல் இல்லை. இது எங்கள் கட்சி கொள்கையுடன் ஒத்துள்ளது.
பா.ஜ.க ஆட்சியில் லஞ்சம் குறைவாக இருந்தது. தங்கநாற்கர சாலை போன்ற திட்டங்கள் பா.ஜ.க. ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டன. பா.ஜ.க. மதவாத கட்சி என்கிறார்கள். முதலில் நாம் எல்லோரும் இந்தியர் என்ற நிலை வரும் போது மதவாதம் என்ற நிலை வராது என்றார் அவர்.
தமிழகத்தில் மது விற்பனையில் ரூ.21 ஆயிரம் கோடி வருவாயை அரசு எதிர்பார்க்கிறது. இது ரூ.40 ஆயிரம் கோடியாக உயரும் போது, தமிழகத்தில 70 சதவீதம் பேர் மது அருந்தும் நிலை உருவாகிவிடும். இலவசத்தை தவிர்த்தாலே மது வருவாய் தேவையில்லாமல் போகும்.
கல்வி நிறுவனம் நடத்தும் எனக்கு, அரசியல் தேவையில்லை. மோசமான அரசியல் சூழ்நிலையை வேடிக்கை பார்க்க மனமின்றி அரசியலுக்கு வந்தேன். தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுவதில்லை.
வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகள் பணம் கொடுத்து ஓட்டுகளைப் பெறுகின்றனர். இதனால் மக்களும் ஊழல்வாதிகளாக மாறும் சூழல் உள்ளது. தமிழகத்தில் அறிவிக்கும் திட்டங்களை, நடைமுறைப்படுத்துவது இல்லை. தனியார் ஊக்குவிப்பால் மும்பை, குஜராத் வளர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல தமிழகத்திலும் வளர்ச்சிக்கு தாராள தனியார்மயத்தை அனுமதிக்க வேண்டும்.
வடக்கிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதால், சிங்களர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம். மாறாக பாஜகவை ஆதரிப்போம்.
காரணம் காங்கிரஸ் கட்சியோடு பாஜகவை ஒப்பிட்டு பார்த்தால், பாஜகவில் ஊழல் குறைவு என்றே கூற வேண்டும். பலரும் கூறுவது போல பாஜகவில் மதவாதம் துளியும் இல்லை என்றார்.

About