மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி கசாபுக்கு பிரியாணி கொடுத்தது போதும், உடனடியாக அவனை தூக்கில் போடுங்கள் என்று பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.
மும்பை தாக்குலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஜ்மல் கசாப்புக்கு கீழ்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த நிலையில் கசாப்பின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததோடு, கசாப் இந்தியாவுக்கு எதிரான போர் தொடுத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக பேசிய பா.ஜ.க மூத்தத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, கசாபின் மனு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக கூறினார்.
மேலும் அவனுக்கு பிரியாணி கொடுத்தது எல்லாம் போதும், தண்டனையை உடனடியாக நிறைவேற்றி அவனை தூக்கிலிட வேண்டும் என்றார்.