Showing posts with label chennai. Show all posts

Thursday, December 13, 2012

thumbnail

புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஜெயலலிதா

சென்னை காமராஜர் சாலையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
 அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவிடம் காமராஜர் சாலையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகே 8.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
 இதன் நுழைவு வாயில் முகப்பை மாற்றியமைத்தல், முன்பக்க சுற்றுச்சுவரைப் புதுப்பித்தல் போன்ற பணிகள் ரூ.3 கோடியே 40 லட்சம் செலவிலும், எழிலூட்டும் பணிகள் ரூ.4 கோடியே 30 லட்சம் செலவிலும் மேற்கொள்ளப்பட்டன.
 புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்ததோடு, எம்.ஜி.ஆரின் சமாதிக்கும் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 புதுப்பொலிவுடன் முகப்பு வாயில், புல் வெளி: நினைவிடத்தின் முகப்பு வாயில் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 அங்குள்ள திறந்தவெளி முழுவதும் கொரிய புல், பிரத்யேகமான செடி வகைகளான பல்மெரியா ஆல்பா, டேட் பாம், ஸ்பைடர் லில்லி, அடினியம் ஆகியவற்றைக் கொண்டு புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையும் கிரானைட் கற்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
 சமாதியைச் சுற்றி கிதார் வடிவில் புதிய நடைபாதையும், மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக சாய்வு நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதை ஓரங்களில் துருப்பிடிக்காத இரும்பு கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 சமாதியிலும், சமாதியைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள வளைந்த இதழ்களில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் மெருகேற்றப்பட்டுள்ளது.
 புல்வெளியின் நடுவில் நீருற்றும், நினைவிடத்தின் பின்பகுதியில் செயற்கை நீர்வீழ்ச்சியும் அமைக்கப்பட்டுள்ளன.
 அலங்கார மின் விளக்குகள் போதிய வெளிச்சத்துடன் சமாதி மற்றும் நினைவிடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.
 உயர் கோபுர மின் விளக்குகள் நுழைவு வாயிலிலும், சமாதியிலும் பொருத்தப்பட்டுள்ளன.

Saturday, July 07, 2012

thumbnail

Single window counselling for engineering admissions in the state kicked off at Anna University, Chennai/பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியது

சென்னை, ஜூலை 7 : தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ சேர விண்ணப்பித்த தொழிற்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு இன்று காலை அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு துவங்கியது.இன்று காலை 8 மணிக்கு மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தனர். தொழிற்பிரிவினருக்கு இன்று துவங்கி 11ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 13ம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வர நடைபெற உள்ளது.

Wednesday, July 04, 2012

thumbnail

Tamilnadu self financing medical college fees -சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு கல்வி கட்டணம் உயர்த்தப்படுகிறது

நடப்பு கல்வியாண்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்து சுயநிதி தனியார் தொழிற்கல்வி கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது.
இக்குழுவின் தலைவர் நீதிபதி பாலசுப்பிரமணியன் சென்னையில் இதனை தெரிவித்தார். இதன்படி தமிழத்தில் செயல்பட்டு வரும் 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு கல்வி கட்டணம் உயர்த்தப்படுகிறது. 85 ஆயிரம் ரூபாயாக இருந்த பல் மருத்துவக் கல்லூரி கட்டணம் இந்த ஆண்டு ஒரு லட்ச ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ் படிப்புகளை வழங்கும் மருத்துவக் கல்லூரிகளில் 10 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் கல்வி கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக வரவு செலவு விபரங்களை கல்வி கட்டண நிர்ணயக் குழு பெற்றது. இதுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகு தற்போது புதிய கல்வி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்புக் கல்வி ஆண்டுக்கு சுயநிதி அரசுஎம்.பி.பி.எஸ். இடத்துக்கு நீதிபதி பாலசுப்பிரமணியன்அறிவித்த ஆண்டு கட்டண விவரம்:-
1. பி.எஸ்.ஜி., கோவை - ரூ.2.50 லட்சம்
2. மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி - ரூ.2.50 லட்சம்
3. கற்பகவிநாயகா - ரூ.2.50 லட்சம்
4. ஸ்ரீ மூகாம்பிகா கன்னியாகுமரி - ரூ.2.50 லட்சம்
5. தாகூர், சென்னை - ரூ.2.50 லட்சம்
6. சென்னை மருத்துவக் கல்லூரி,திருச்சி (எஸ்ஆர்எம் குழுமம்) - ரூ.2.50 லட்சம்
7. ஈரோடு ஐஆர்டி பெருந்துறை - ரூ.2.50 லட்சம்
8. ஸ்ரீ முத்துக்குமரன் - ரூ.2.25 லட்சம்
9. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் - ரூ.2.25 லட்சம்
10. சேலம் அன்னபூரணி - ரூ.2.25 லட்சம்

About