கொழும்பு: உலக கோப்பை டுவென்டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற
சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது முக்கிய போட்டியில் இந்தியா, பாகிஸ்தான்
அணிகள் மோதின. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ்
வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணயில் ஹர்பஜன்,
பியுஷ் சாவ்லா நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக சேவக், பாலாஜிக்கு
வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 19.4 ஓவரில்
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன் எடுத்து , இந்தியாவுக்கு 129 ரன்
இலக்கு நிர்ணயித்தது. இந்தியா சார்பில் பாலாஜி 3, அஸ்வின் 2, யுவராஜ் 2
விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி 17 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. கம்பிர் டக் அவுட்டானார். சேவக் 29 ரன்கள் எடுத்து, விக்கெட்டை பறிகொடுத்தார். கோக்லி 78, யுவராஜ் 19 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தன