Showing posts with label died after their uncontrolled car hit to a parked lorry in Vellore.. Show all posts

Saturday, August 04, 2012

thumbnail

வேலூர் பி.டெக்., படித்து வரும் வெளிமாநில மாணவர்கள் 3 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். 3 students died after their uncontrolled car hit to a parked lorry in Vellore.

வேலூர் : வேலூர் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் பி.டெக்., படித்து வரும் வெளிமாநில மாணவர்கள் 3 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். இப்பல்கலைக்கழகத்தில் தனுதத்தா ரெட்டி(ஆந்திரா), ராஜூ சோநாத்(ஜெய்பூர்), மாருதி(ஆந்திரா), மணிகண்டன்(ஆந்திரா), ஜெய்சங்கர்(ஆந்திரா) ஆகியோர் பி.டெக் படித்து வருகின்றனர். இவர்கள் 5 பேரும் நேற்று இரவு வேலூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது அருந்தி விட்டு தகராறு செய்துள்ளனர். பின்னர் அதிகாலை 4 மணியளவில் காரில் ஹாஸ்டலுக்கு திரும்பி உள்ளனர். அப்போது வேகமாக வந்த கார் காட்பாடி அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்த சிமெண்ட் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தனுதத்தா ரெட்டி, ராஜூ சோநாத், மாருதி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மணிகண்டன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் படுகாயங்களுடன் காட்பாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும‌திக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About