2008 ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். அப்போது தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் ஒருவன் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். அவன் மீது மும்பை துணை நிலை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் அவனுக்கு மரண தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தது.
இதையடுத்து தீர்ப்புக்கு எதிராக தீவிரவாதி கசாப் மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டான். விசாரணைக்குப் பிறகு அதுவும் தள்ளுபடியாக, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான். அதன் மீதான வழக்கு விசாரணை முடிந்து, மரண தண்டனையை உறுதி செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைவர்கள், கசாப்பின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.