Showing posts with label Sri Lankan defence training. Show all posts

Saturday, August 25, 2012

thumbnail

இலங்கை ராணுவத்துக்கு உதகையில் பயிற்சி : முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம்/Jayalalithaa writes to PM on training of Sri Lankan personnel

உதகை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவ வீரர்களை உடனடியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளர்.

இது குறித்து பிரதமருக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை ராணுவ வீரர்கள் திசநாயக மகோத்த லாலங்கே மற்றும் ஹவாவாசம் ஆகியோருக்கு வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி அளிக்கப்படுவதை சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த இரு வீரர்களுக்கும் கடந்த 4 மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருவதையும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளனார். எனினும், இதுகுறித்து தமிழக அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கை, தமிழக மக்கள் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். எனவே, இலங்கை வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

About