தமிழகம் முழுவதும் சுமார் ஆறேமுக்கால் லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மாதம் 12-ந் தேதி நடைபெற்ற தகுதித் தேர்வின் முதல் தாளை 2 லட்சத்து 88ஆயிரத்து 588 பேர் எழுதினர். இதில் ஆயிரத்து 735 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2-ம் தாளை எழுதிய 3 லட்சத்து 88 ஆயிரத்து 175 பேரில் வெறும் 713 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தாள் தேர்வுகளையும் எழுதியவர்களில் 83 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் 18 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
