பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25-04-2012
உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மாராவ், மற்றும் வேணுகோபால் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், பெரம்பலூரில் உள்ள குன்னம் என்னும் இடத்தில் மருத்துவக்கல்லூரி கட்ட கடந்த மார்ச் மாதம் டெண்டர் விடப்பட்டதாகவும். அந்த இடம் பொருத்தமானதாக இல்லை என்று வேறு இடத்தில் தேர்வு செய்ய டெண்டர் விடப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை வழக்கறிஞர் பழனி முத்து என்பவர் தொடர்ந்தார். அதில், பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரித் தொடங்க 2010 -11 பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், அதற்காக முப்பது ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும், அங்கு மருத்துவக்கல்லுாரி கட்ட வேண்டும் என்றும் தனது மனுவில் கேட்டுக்கொண்டார்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments