மாஜி தி.மு.க., அமைச்சர் நேருவின் தம்பி, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அரிசி ஆலை கட்டியிருந்ததாக எழுந்த புகாரை அடுத்து, ஆலையின் ஒருபகுதியை இடிக்கும் பணி நடந்து வருகிறது.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு. இவரது தம்பி மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை, திருச்சி லால்குடி சாலையில் பூவாளூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து ஆலை கட்டியிருப்பதாக புகார் எழுந்தது. இந்த ஆலை வளாகப்பகுதியில் மொத்தம் ஆயிரத்து 200 சதுர அடி புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக அலுவலர்கள் புகார் கூறினர். ஆனால் இதற்கு சமமான பட்டா நிலத்தைக் கொடுத்திருப்பதாக நேரு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இது இன்னமும் கலெக்டரின் பரிசீலனையிலேயே உள்ளது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments