Friday, October 11, 2013

thumbnail

100நாள் வேலைக்கு ரூ.1846கோடி ஒதுக்கீடு

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான ஊதியத்தை வங்கிகள் மூலமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு ஆயிரத்து 846 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்கெனவே தமிழகத்திற்கு 2 ஆயிரத்து 844 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதற்கு வரவேற்பு தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ், ஊதியத்தை வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மட்டுமே மின்னனு நிதி பரிமாற்ற முறையில் ஊதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாகவும், இவ்வாறு செய்வதன் மூலம் ஊதிய தாமதம் ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஊதியம் 148 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 645 கிராம பஞ்சாயத்துகளில் 70 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About