Monday, December 17, 2012

thumbnail

ஜப்பான் பொதுத் தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான ஷின்சோ அபே அமோக வெற்றி பெற்றுள்ளார்

டோக்கியோ: ஜப்பான் பொதுத் தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான ஷின்சோ அபே அமோக வெற்றி பெற்றுள்ளார். ஜப்பானில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயக கட்சி சார்பில் யோஷிஹிகோ நோடா பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. ஒரு மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற சட்டப்படி, ஜப்பானில் நேற்று பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆளும் கட்சி சார்பில் யோஷி ஹிகோ நோடா மீண்டும் போட்டியிட்டார். முக்கிய எதிர்க்கட்சி லிபரல் டெமாக்ரட்டிக் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (58) போட்டியிட்டார். நேற்று நடந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியில், புகுஷிமா அணு உலைகள் பாதிக்கப்பட்டன. அதன்பின் அணு உலைகள் மூடப்பட்டன. இதனால் மின் பற்றாக்குறை அதிகரித்தது. பல முன்னணி கம்பெனிகள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர தொடங்கின. இதனால் 2030ம் ஆண்டுக்குள் அணு உலைகள் எல்லாவற்றையும் படிப்படியாக மூடி விடலாம். அதுவரை ஒரு சில அணு உலைகள் இயங்கட்டும் என்று பிரதமர் நோடா உத்தரவிட்டார். மேலும், கடும் பொருளாதார நெருக்கடியிலும் ஜப்பான் சிக்கியது. இதனால் ஆளும் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கருத்துக் கணிப்புகள் கூறியபடி எதிர்க்கட்சியான லிபரல் டெமாக்ரட்டிக் கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. சிறிய கட்சியுடன் கூட்டணி சேர்ந்து லிபரல் டெமாக்ரட்டிக் கட்சி 325 இடங்களை பிடித்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஆட்சியை அமைக்க தகுதி பெற்றுள்ளது. பிரதமராக அபே மீண்டும் பதவியேற்க உள்ளார். இவர் கடந்த 2006- 2007ல் ஓராண்டு பிரதமராக இருந்த போது இந்தியாவுடன் மிக நெருக்கமாக இருந்தார். ஜப்பான் - இந்திய உறவை பலப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத் தார். அபே மீண்டும் பிரதமராக உள்ளது இந்தியாவுக்கு சாதகம் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About