Wednesday, December 12, 2012

உலகின் மிக உயரமான கட்டிடம்-"பேர்ஜ் டுபாய்"

பேர்ஜ் கோபுரம் (Burj Tower)
[முக்கிய குறிப்பு: "பேர்ஜ் டுபாய்" தற்போது "பேர்ஜ் கலீஃபா" (Burj Khalifa)என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.உலகின் மிக உயரமான இந்த 828 மீற்றர் (2717 அடி) கோபுரத்தின் பெயர் மாற்றம் பின்னதான புதிய தகவல் யாவும் பிந்திய செய்திகள் பகுதியாக கட்டுரையின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.]
உலகின் அதி உயரமானதும் அதிசயம் பல கொண்டதுமான "பேர்ஜ் டுபாய்" கோபுரம் (Burj Dubai Tower). இதுவரை மனிதனால் பூமியில் உருவாக்கப்பட்ட மிகமிக உயரமான கட்டிடம் எனும் பெயர் பெறுகின்றது. இது இன்றய உலகில் அனைவர் கவனத்தையும் கவரும் நகரமான டுபாய் (ஐக்கிய அரபு இராச்சியம்-UAE) இல் அமைந்துள்ளது. "பேர்ஜ் டுபாய்" கோபுரம் கட்டுமான வேலைகள் 2004ம் செப்ரம்பர் 21 இல் தொடங்கி இப்போதும் நடைபெற்று வருகின்றது. 190 கெக்ரர் நிலப்பரப்பில் செயற்கை நதிகளுடன் உருவாகும் பிரமிப்பூட்டும் கட்டிடத்தின் வியக்கவைக்கும் தகவல்கள் கீழே தொடர்கின்றன.
 • கடிடத்தின் முழுமையான உயரம் 818 மீற்றர் (2,684 அடி) என இதுவரை சொல்லப் படுகின்ற போதிலும் இதன் உண்மையான உயரம் (இறுதிவரை இரகசியம் பேணப்படுகின்றது) திறப்பு விழா தினமான 2009ம் டிசம்பர் 20 அன்று வெளியாகும்.
 • "பேர்ஜ் டுபாய்" கோபுரத்திலுள்ள அடுக்குகள் (மாடி) எண்ணிக்கை 160 என இந்த கட்டிடத்தின் கட்டுமானத்தை கவனித்துவரும் Emaar Properties அறிவித்துள்ளது.
 • பேர்ஜ் டுபாய் கட்டுமானத்தில் பெருமளவில் உபயோகிக்கப்படும் உருக்கு , சிமெந்து கலவை , கண்ணடி இவற்றின் உத்தேசிக்கப்பட்ட அளவுகள் முறையே 39,000 மெற்றிக் தொன், 330,000 கன மீற்றர்,142,000 கன மீற்றர் என இதுவரை அறியப்படுகின்றது.
 • வேலையாட்கள் 10.000 க்கு மேல் எனவும் மணிக்கணக்கில் வேலை செய்யப்படும் நேரம் கணிக்கப்பட்டால் 29 மில்லியன் மேலான மணித்தியாலங்கள் எனவும் சொல்லப்படுகின்றது.
 • முழு கட்டிட அமைப்பு 1.60 சதுர கிலோ மீற்றர் பரப்பு நிலத்தில் அமைக்கப் படுவதுடன் இதற்கு செலவாகும் பணத்தின் மொத்தத் தொகை 8 பில்லியன் டொலர்கள்.
 • இதன் அத்திவாரம் 80,000 சதுர அடி பரப்பில் அமைந்த நிலபகுதி் 55 மீற்றர் (84 அடி) ஆழத்தில் அகழ்வு செய்யப்பட்டு ஆரம்பிக்கின்றது.
 • பேர்ஜ் டுபாய் கோபுரத்தின் முகப்பு ( சுற்றிவர ஆறு முகம்) இராட்சத உருக்கு சட்டங்கள், குழல்கள், கண்ணாடிகள் என்பவற்றினால் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.
 • முழுமையான கட்டிடம் 66 இரட்டை தட்டு மேல்கீழ்காவி (Double-deck elevators) ஒவ்வொன்றும் மணிக்கு 40 மைல்கள் அல்லது செக்கனுக்கு18 மீற்றர் வேகம் பயணிக்க வல்லதுடன் இதுவே இன்றுள்ள அதிவேகமுமாகும்.
 • மேல் சொல்லப்பட்ட வேகத்தில் கீழிருந்து மேல் செல்வதற்கு 15 நிமிட காலம் எடுக்கின்றது. இதில் ஒரே தடவையில் 42 பேர் பயணிகமுடியும்.
 • உலகில் உயரமான இந்த கட்டிடம் இராட்சத வெப்பமானியாகவும் (மாறும் வெப்பநிலை) உள்ளது. அதாவது இயற்கை வெப்பநிலை கட்டிடத்தின் கீள் பகுதியில் இருந்து மேல் உச்சியை நோக்கி 8 பாகை செல்சியசினால் (C0) குறைவடைகின்றது.
 • இந்த அதி உயர் கட்டிடம் தன்னகத்தே 5 மில்லியன் சதுர அடி அலுவலக உபயோக பகுதி, 175 ஹொட்டல் (Armani hotel) அறைகள், 900 தொடர்மாடிகள்(அபர்ட்மென்ட்ஸ்), 4 நீச்சல் தடாகம் , 150,000 சதுர அடி பரப்பில் உடற்பயிற்சி மையம், உலகின் மிக உயரத்திலுள்ள ( 124 வது மாடி) கண்டுகளிப்பு பகுதி என்பன குறிப்பிடக் கூடியன.
 • இந்த கட்டிடம் இதுவரை மிகப்பெரிய கட்டிடமாக கருதப்பட்ட தய்பெய் 101 (Taipei 101)ஐ விடவும் 1000 அடிகள் அதிக உயரமானது. தய்பெய் இதுவரை உலகின் மிக உயரமான கட்டிடமாக 101 மாடி (அடுக்கு) களுடன் இருந்துவந்தது. மேலும் இதன் உயரம் 1972 இல் இருந்து நெடு காலம் தனி இடத்தை பிடித்திருந்த "எம்பஃயர் ஸ்டேட்" இன் இரண்டு மடங்குகள் என்பதும் குறிப்பிடும் படியான விடயம்.
 • அதிகபட்சம் ஒரேநேரத்தில் 35,000 மக்களை உள்வாங்கக்கூடிய இந்த கட்டிடம் மொத்தமாக 15,000 யன்னல்களையும் கொண்டுள்ளது.
 • கட்டிடத்தின் நிலத்திற்கடியிலான 3,000 கார்கள் தரிப்பதற்கான இடவசதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • "பேர்ஜ்" சுற்று வட்டாரம் 22 மில்லியன் சதுர அடி பரப்பு நிலத்தினை உள்ளடக்கும். இந்த நிலப்பரப்பில் 3000 தனியார் வீடுகள், 19 அடுக்கு மாடி கோபுரங்கள் , 9 நவீன ஹொட்டல்கள் , 6 ஏக்கர் பூங்கா , 12 ஹெக்ரயர் பரப்பில் நீர் தடாகம் என்பனவும் அமைக்கப்படுகின்றது.
 • இந்த கோபுரம் (பேர்ஜ் டுபாய்) இயற்கை சீற்றத்தில் சிக்கும் காலத்தில் இதன் முனை பகுதி அதிகபட்சம் நான்கு அடிகள் பாக்கம் பக்கமாக ஊசலாடும் என கணிப்பிடப்படுகின்றது.
 • "பேர்ஜ்" என்பது அரபு மொழியில் நட்சத்திர கூட்டு (constellation) என அர்த்தம் சொல்லப்படுகின்றது.
 • உலகின் உயரமான இந்த அபார சாதனைகள் கொண்ட கட்டிடம் தெளிவான காலநிலையில் 60 மைல் தூரத்தில் இருந்து சாதாரண கண்களுக்கு புலனாகும் என சொல்லப்படுகின்றது.
 • சிக்காகோ கட்டிட வரைஞரால் (Chicago architects) வடிவமைக்கப்பட்ட "பேர்ஜ் டுபாய்" பாலைவனத்தில் கட்டிடக்கலை நிகழ்த்திய அற்புதம் என்று வர்ணிக்கப் படுகின்றது.
  • வேறு ஒரு தகவல் :- இந்த அபார விடயத்தை யப்பான் நாடு முறியடிக்கும் காரிகமாக எடுத்து 196 மாடிகள் 1000 மீற்றர் உயரமுடன் கட்ட திட்டம் தீட்டிவருகின்றது .
  • (இந்த கட்டிடம் தொடர்புடைய விடயங்கள் கட்டிடம் முடிவுறும் காலத்தில் மீள் புதுப்பிக்கப்படும்.)
 • மேலுள்ள தகவல் தொடர்புடைய வீடியோ (youtube) காட்சி
 • இது தொடர்பில் முழுபக்க விளக்கம் .
***** பிந்திய செய்திகள்.
ஆரம்பத்திலிருந்து (திட்டமிடலில் இருந்து கட்டிடம் பூர்த்தியாகும் வரை) "பேர்ஜ் டுபாய்" என அழைக்கப்பட்டுவந்த உலகின் மிக உயரமான கட்டிடம் 2010 ம் வருடம் ஜனவரி 4 ம் திகதியிலிருந்து "பேர்ஜ் கலீஃபா" (Burj Khalifa) என பெயர்மாற்றம் பெற்றுள்ளது. "பேர்ஜ் கலீஃபா" கட்டிடத்தின் பிமாண்டமான திறப்பு விழா 2010 ம் வருடம் ஜனவரி 4 ம் திகதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா திட்டமிட்ட தினத்திலும் சிலநாள் தாமதித்து நடைபெற்ற போதிலும் இந்த திறப்பு விழா தினமானது தற்போதைய டுபாயின் ஆட்சியாளரின் 4 வது ஆண்டு பூர்த்தியினை நினைவு கூரும் தினத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டது . மேலும் இறுதி நேரத்தில் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டிய (சிக்கிய) கட்டுமான வேலைகளை பூர்த்தி செய்வதற்கு வேண்டிய மேலதிக பண உதவி ஐக்கிய அரபு ராச்சியத்தின் ஜெனாதிபதி Sheikh Khalifa அவர்களின் பணிப்பின் பிரகாரம் அபுதாபியினால் வழங்கப்பட்டது விசேட அம்சமானது. மேலே சொல்லப்பட்ட இந்த உதவி காரணமான கெளரவிப்பாகவே கட்டிடத்தின் புதிய பெயரில் ஜனாதிபதியின் பெயர் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது . மேலும் இத்தனை சோதனைகள் , வேதனைகள், சாதனைகள் பின்னால் மறைக்கப்பட்ட கட்டிடத்தின் நிஜமான உயரம் 828 மீற்றர் (2717 அடி) என உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட நாளாகவும் இந்த திறப்பு விழா அமைந்திருந்தது.
இயற்கையின் சீற்றத்திற்கு ஈடுகொடுத்து ஊசலாடும் இந்த உலக சாதனையின் சிகரம் இன்றய உலக பொருளாதார தாக்கத்தினால் ஆட்டம் கண்டுள்ளது.அதாவது கட்டுமான இறுதி வேலைகளுக்கு கடன்படும் நிலைக்கு தள்ளப்பட்டது மல்லாமல் கட்டிடத்தின் விலை 50% விழுக்காடு கண்டுள்ளது புதிய தகவல். எது எப்படி இருந்த போதிலும் 5 வருடங்களின் மேலாக 2 பில்லியன் டொலர் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட "பேர்ஜ் டுபாய்" என அறியப்பட்ட "பேர்ஜ் கலீஃபா" உலகின் மிக உயரமான கட்டிடம் (828 மீற்றர்) பெயரையும் புகழையும் வரலாற்றில் இடம் பிடிக்கின்றது என்பது உறுதியான விடையம்.
பிமாண்டமான திறப்பு விழா தொடர்பிலான வீடியோ பதிவு.
"பேர்ஜ் கலீஃபா" வடிவம் 360 பாகை வடிவில் பார்வையிட1
"பேர்ஜ் கலீஃபா" வடிவம் 360 பாகை வடிவில் பார்வையிட2
Big Picture
skyscrapercity.com
map

No comments:

Post a Comment

Social WEB